கிளிநொச்சியில் கர்ப்பவதிகளுக்கு காலாவதியான திரிபோசா!

கிளிநொச்சியில் குழந்தைகளுக்கும், கர்ப்பவதிகளுக்கும் காலாவதியாகும் திரிபோசா வழங்கப்பட்டுள்ளது

கிளிநொச்சியில் கர்ப்பவதி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காலாவதியாகும் நிலையில் திரிபோசா வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியின் உருத்திரபுரம், சிவநகா்,உதயநகா் போன்ற பல கிராமங்களில் இவ்வாறு காலாவதியாகும் நிலையில் திரிபோசா வழங்கப்பட்டுள்ளது.

13-11-2017 அன்று வழங்கப்பட்டுள்ள திரிபோசா பைகற்றுகள் 15-11-2017 அன்று காலாவதியாகும் திகதியில் காணப்படுகின்றன.

இது குறித்து சில பெற்றோா்கள் மற்றும் கர்ப்பவதிகள் கேள்வி எழுப்பிய போதும் அவற்றை கவனத்தில் எடுக்காக உத்தியோகத்தர்கள் இவை மட்டுமே இருப்பதாகவும் விரும்பினால் பெற்றுக்கொள்ளுங்கள் இல்லையெனில் விட்டுச் செல்லுங்கள் என தெரிவித்துள்ளனர்.

வறுமை நிலையில் உள்ள பல குடும்பங்கள் வேறு வழியின்றி காலாவதியாகும் திரிபோசாவை பெற்றுச் சென்றுள்ளனா்.

இந்த திரிபோசா பைகற்றுகள் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு வைத்து பயன்படுத்தப்படும் எனவும் பெற்றுக்கொண்டவா்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*