உங்களிற்கு ஊர்மீது பற்றில்லையா???

ஊர்ப்பற்று கொண்ட ஊரில் வசிக்கும் என் தம்பிகளிற்கும், அண்ணன்மாரிற்கும் எனது அன்பான வணக்கங்கள்

கண்ணையம்மன் கடற்கரை தொடங்கி, கோரியாவடி கடற்கரைவரை படர்ந்துள்ள கற்றாளைகளை அகழ்ந்து வாகனத்தில் ஏற்றி சென்றுள்ளார்.

அதை அந்த ஏரியா மக்களே பாத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறையும் நாமதான் வந்து கேள்வி கேட்கனுமா??

உங்களிற்கு ஊர்மீது பற்றில்லையா???

நீங்கள் மெளனமாய் இருப்பதால்தான் சுலக்சனா இந்த காரியத்தை சுலபமா செய்துவிட்டு பழியை வேறொருத்தர் மீது போடுகிறார்.

நேற்று கையும் களவுமாக தனது காணிக்குள் கற்றாளை இறக்குவதை காவ்துறை பிடித்துள்ளது.

அதற்கு அவர் கடற்கரை ஓரத்திலிருக்கும் காணிகள் எல்லாம் தனது அப்பாவின் பூர்வீகக்காணி என விளக்கம் கொடுத்துள்ளார்.

இளைஞர்களே!

கடலருகே வளரும் கற்றாளைகளை அகழ்வதால் மண்ணரிப்பு ஏற்பட்டு கடல்நீர் ஊருக்குள் வந்துவிடும்.

வீண் பழியை சுமந்து கொண்டு நாம் மீண்டும் மீண்டும் கத்துவதற்கு காரணம் எம்மக்களின் வாழ்வும், எம்மண்ணின் வளமும் எம் கண்முன்னே அழிந்து போக்கூடாது என்ற காரணத்திற்காய்.

சுலோ போன்றவர்கள் காசிற்காய் எதையும் செய்பவர்கள்.

தயவு செய்து முன்வந்து தப்பை தட்டிக்கேளுங்கள்.

வருங்காலம் உங்களிற்கானது!

அதை நீங்கள்தான் பாதுகாக்க வேண்டும்.

பொது இடத்தில் உருவாகும் வளங்கள் அந்த மண்ணிற்கும், அரசாங்கத்திற்கும் சொந்தமானது.

அதை பாதுகாப்பது எம்கடமையானது.

அரசாங்கமே கற்றாளைகளை பயிரிடுவதற்கு முன்வரும்போது இவர் கற்றாளைகளை அகழ்ந்து எம்மண்ணை நாசமாக்கிறார்.

BAA 3951 இந்த இலக்கம் கொண்ட வாகனத்தில்தான் இவர் நேற்று கற்றாளை கடத்தியுள்ளார்.

Facebook Comments

There is no ads to display, Please add some
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*