காதலிக்க மறுத்தார் மாணவி:வழி மறித்துத் தாக்கினார் ஆசிரியர்

காதலிக்க மறுத்த மாணவியைத் தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் தற்காலிகமாக பதவியிலிருந்து  இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் கிளிநொச்சியில் நடந்துள்ளது.  கிளிநொச்சியில் புறநகர்ப்பகுதியில் உள்ள உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவி ஒருவரிடம் தனது காதலைத் தெரிவித்தார் என்றும் மாணவி அதற்கு மறுப்புத் தெரிவித்தார் என்றும் கூறப்படுகின்றது.

ஆசிரியர் தனது காதலைத் தொடர்ந்து தெரிவித்து வந்தார் என்றும் கடந்த வெள்ளிக்கிழமை மாணவி பாடசாலை முடிந்து வீடு  திரும்பிய போது அவரை வழிமறித்துத் தாக்கினார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மாணவி இது தொடர்பில் பெற்றோரிடம் தெரிவித்தார். இந்த விடயம் கடந்த திங்கட்கிழமை வலயக்கல்விப் பணிமனையின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இறுதித் தீர்வு எட்டும் வரை அந்த ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். என்று வலயக் கல்விப்பணிப்பாளர் தெரிவித்தார்.

இந்த ஆசிரியர் தொண்டர் ஆசிரியராகப் பணியாற்றி நிரந்தர நியமனம் பெற்றவர் என்று கூறப்படுகின்றது.

Facebook Comments

There is no ads to display, Please add some
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*