இளைஞர் இருவர் கொக்குவிலில் கைது

யாழ்ப்பாணம் கொக்குவில் புகையிரத நிலைய வீதியில் இளைஞர்கள் இருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களின் கைபேசிகளில் வாள்களின் ஒளிப்படங்களை பதிவு செய்து வைத்திருந்தனர். அதனடிப் படையிலேயே சந்தேகத்தில் இரு வரும் கைது செய்யப்பட்டனர்.
விசாரணைகளின் பின்னர் இருவரும் நாளை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படுவர்.
கொக்குவில் புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய ராஜ்குமார் மற்றும் ஜசிந்தன் ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் மேலும் கூறினர்.
Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*