தொண்டமனாறு கடற் பகுதியில் 153.7 கிலோ கஞ்சா

யாழ்ப்பாணம் தொண்டமனாறு கடற்பரப்பில் இருந்து இரு ஐந்து மயில் துரத்தில் வைத்து சுமார் 153 கிலோ கிராம் கேரள கஞ்சாவினை காங்கேசன்துறை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் கஞ்சா கடத்திய குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு கடற் படையினரின் வழமையான சோதனை நடவடிக்கையின்  சந்தேகதிற்கு இடமான படகு ஒன்றை சோதனை இட்டுள்ளனர்.இதன் போது அப் படகினுள் சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் கைப்பற்றப்படவில்லை. பின்னர் இன்று காலை  6:30 மணியளவில்    கடற்பரப்பில்  இஇரு பொலித்தீன் பையினுள் 50 கேரளா கஞ்சா பொதிகளில் 153.7Kg கஞ்சா பொதியை மீட்டுள்ளனர்.

கஞ்சா பொதிகளானது இந்தியாவில் இருந்து கடல்மார்க்கமாக இலங்கைக்கு கடத்தி கொண்டுவரப்பட்டதாகவும்

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவையும் குறித்த   சந்தேகநபரையும் காங்கேசன்துறை  பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக காங்கேசன்துறை கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

2015 ஐனவரி மாதம் தொடக்கம் இன்றுவரை காங்கேசன்துறை கடற்படையினரால் 1695.33 கிலோ கிராம் கேரள கஞ்சாவினை காங்கேசன்துறை கடற்படையினர் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*