யாழ் கொக்குவில் தண்ணீர் கலந்த எரிபொருள் விற்பனை!!

யாழில், அண்மையில் புதிதாக அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் டீசல் வகை எரிபொருளில் தண்ணீர் கலந்துள்ளமையால் பெரும் குழப்பம் நிலவுகின்றதாக தெரியவருகின்றது.

யாழில், அண்மையில் புதிதாக அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் டீசல் வகை எரிபொருளில் தண்ணீர் கலந்துள்ளமையால் பெரும் குழப்பம் நிலவுகின்றதாக  தெரியவருகின்றது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ் கொக்குவில் பகுதியில் அண்மையில் அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் டீசல் நிரப்பிய வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பழுதடைந்து இடைவழியில் நின்றதால் ஓட்டுனர்கள் பெரும் குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளார்கள்.

பின்னர் திருத்துனர்களை வரவளைத்து  ஆராய்ந்து பார்த்த போது, டீசலில் தண்ணீர் கலந்து வெள்ளை நிறமாக தென்பட்டுள்ளது.

நிலைமையை புரிந்துகொண்ட ஓட்டுனர்கள் எரிபொருள் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். இதேவேளை, புதிய ஹயேஸ்  வாகனம் ஒன்று டீசலை நிரப்பிய பின்னர் அந்த இடத்தை விட்டு நகர மறுத்துள்ளது. இதனால் குழம்பிய ஓட்டுனர் திருத்துனர் ஒருவரின் உதவியை நாடியுள்ளார்.

உடனே அவர் விசயத்தை தெரிவித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த சாரதியுடன் ஏனைய சாரதிகளும் சேர்ந்து டீசலை பரிசோதித்த போது தண்ணீர் கலந்துள்ளமை உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக, சுன்னாகம் பொலிசாரிற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிசார் விரைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*