தீவகத்தை இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்

தீவகத்தில் மீண்டும் அரங்கேறிய ஈனச் செயல்வே.

லணை மத்திய கல்லூரியை அண்மித்த பகுதியில் நேற்றைய தினம் இரவு கட்டப்பட்டு இருந்த வேலணை மேற்குப் பகுதியைச் சேர்ந்த தவராஜா எழில்ராஜ் என்பவருக்கு சொந்தமான ரூபா 65000.00 பெறுமதியான ஒன்பது மாத சினைப்பசு திருடர்களால் இறைச்சிக்காக கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது.

அது தொடர்பான பதிவுகள் இவை.

அண்மைக்காலமாக பசு வதை என்பது எமது பிரதேசத்தில் குறைவடைந்து காணப்பட்ட நிலையில் மீண்டும் இச் செயல் இடம்பெற்றமை மக்களிடையே ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது.

தாய்க்கு நிகரான பசுமாட்டை அதுவும் ஒன்பது மாத சினைப்பசுவை இறைச்சிக்காக கொலை செய்தமை எவ்விதத்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாத பாவச் செயலாகும்.

தீவகத்தை இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*