யாழ்.மாவட்­டத்தில் வடி­கா­ல­மைப்புத் திட்­டத்தை செயற்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும்

unnamed8யாழ்.மாவட்­டத்தில் மலக்­க­ழி­வ­கற்றல் மற்றும் வடி­கா­ல­மைப்புத் திட்­டத்தைச் செயற்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்­டு­மென யாழ்.வணிகர் சங்கத் தலைவர் கோரிக்கை விடுத்­துள்ளார்.

யாழ்ப்­பாண பிர­தேச செய­ல­கத்தில் அண்­மையில் நடை­பெற்ற ஒருங்­கி­ணைப்­புக்­குழுக் கூட்­டத்தில் இக் கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, உலக வங்கி நிதி உத­வி­யுடன் யாழ்.நகர், நக­ர­ம­ய­மாக்கல் திட்­டத்தில் அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­வுள்­ளது.

குறிப்­பாக யாழ்.புகை­யி­ரத நிலைய முன்­ப­குதி வெளி­மா­வட்ட அரச, தனியார் பேருந்து நிலை­ய­மா­கவும் றீகல் தியேட்டர் அரு­காமை உள்ளூர் தனியார் பேருந்து நிலை­ய­மா­கவும் மற்றும் யாழ்.வைத்­தி­ய­சாலை வீதி அக­ல­மாக்கல் போன்ற பல திட்­டங்கள் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளன.

எனினும் மலக்­க­ழி­வ­கற்றல் மற்றும் வடி­கா­ல­மைப்புத் திட்டம் முன்­மொ­ழி­யப்­ப­ட­வில்லை. யாழ்.நகர் மட்­டு­மன்றி யாழ்.குடா­நாடு முழு­வதும் குடிநீர் பாரிய பிரச்­சி­னை­யாக உள்­ளது. ஆகவே யாழ்.பிர­தேசம் மற்றும் யாழ். மாந­கர சபைக்­குட்­பட்ட பகு­தியில் மலக்­க­ழி­வ­கற்றல் மற்றும் வடி­கா­ல­மைப்புச் செயற்திட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கும் அதேநேரம் மாவட்டத்தில் குடிநீரையும் பாதுகாக்க முடியும் என்றார்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 1

Comments are closed.