அடிக்கிறார் அந்தர் பல்ரி அருந்தவபாலன்

வடக்குமாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தனை தான் தாக்கவில்லை என்று தமிழரசுக்கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் க.அருந்தவபாலன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த அருந்தவபாலன் கருத்துத் தெரிவிக்கையில்,

ஊடகங்களில் வெளியான காணொளி ஒரு தவறான விம்பம். காருக்குள் இருந்த பிரமுகரை கௌரவ சயந்தன் அவர்கள் இழுத்து விழுத்தாமல் தடுப்பதற்காக சயந்தனை தடுக்க முயற்சித்தேன். கையில் தலைக்கவசம் இருந்தது.

காணொளியில் அது அடிப்பதைப் போன்று பதிவாகியுள்ளது. அது உண்மை இல்லை. சயந்தனைத் தாக்கும் எண்ணமும் எனக்கு இருக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

காரில் பயணிக்கும் அருந்தவபாலன் அணியினரை சமரசத்துக்கு உட்படுத்த முற்படுகின்ற சயந்தனை பின்பக்கத்தால் வரும் அருந்தவபாலன் தலைக் கவசத்தினால் தாக்கி தள்ளிவிடுகின்ற காட்சி பதிவாகியிருந்து ஊடகங்களில் வெளியாகியிருந்த நிலையிலேயே அருந்தவபாலன் இவ்வாறு மறுப்பு வெளியிட்டுள்ளார்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*