புலிகளின் பெயரை வைத்து வடமராட்சியில் நடக்கும் அசிங்கம்!

வடமராட்சியில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி வேட்பாளர் ஒருவரால், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் பிரசாரத்திற்காக மைதானம் வழங்குவது தொடர்பான இழுபறியே தாக்குதலில் முடிந்துள்ளது.

இமையாணன் மத்திய விளையாட்டு கழகத்தில் தலைவராக உள்ளவர், சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

அந்தபகுதியிலுள்ள விளையாட்டு மைதானம், இந்த கழகத்தின் பாவனையில் உள்ளது.

விடுதலைப்புலிகளின் காலத்தில் சலாம் விளையாட்டு மைதானம் (மேஜர் சலாம்) என பெயரிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில், இமையாணன் மத்திய விளையாட்டு கழகத்தினர் SLFP சிறிய நிதியுதவி பெற்று, மைதானத்திற்குள் புனரமைப்பு பணியொன்றையும் செய்துள்ளளனர்.

சி.ரூபாதரன் என்ற SLFP ஆதரவாளர் தேர்தலிலும் குதித்துள்ளார்.

இந்தநிலையில், சலாம் விளையாட்டரங்கை தேர்தல் பிரசாரத்திற்காக தருமாறு, அந்த பகுதி தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும், இமையாணன் மத்திய விளையாட்டு கழகத்தால் அது நிராகரிக்கப்பட்டு விட்டது.

ரூபாதரன் தேர்தலில் போட்டியிடும் நிலையில், வேறு கட்சிகளிற்கு பிரசாரத்திற்கு அனுமதிக்க முடியாதென்பதாலேயே அனுமதி மறுக்கப்பட்டது.

இந்தநிலையில் சில தினங்களிற்கு முன்னர், தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர் நேரில் சென்று மைதானம் வழங்குமாறு இமையாணன் மத்திய விளையாட்டு கழகத்தினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது ரூபாதரன் குறித்த வேட்பாளரை நெஞ்சில் பிடித்து தள்ளியுள்ளார்.

இதனால் நிலைகுலைந்த த.தே.ம.முன்னணி வேட்பாளர் கீழே விழுந்துள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து, ரூபாதரன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

SLFP அராஜக செயற்பாடு இமையாணன் பிரதேசத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Subscribe to Comments RSS Feed in this post

One Response

  1. இமையாணன் மத்திய விளையாட்டுக்கழகத்தை உதாசீனம் செய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்தச் செய்தியை யார் தங்களுக்குத் தந்தது. முதலில் தங்களுடைய செய்தி நிறுவனம் உண்மையை ஆராயாமல் செய்திகளை வெளியிடுவதுதான் தார்மீகக் கடமையாகக் கொண்டுள்ளதோ என்ற ஐயம் எங்களுக்குத் தோள்றுகின்றது. ஏனெனில் தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் வேட்பாளர் மத்திய விளையாட்டுக் கழகத்தினை தனது தேர்தல் பிரச்சாரத்துக்காக கோரியிருந்தார் என்பது தங்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர் எவ்விதம் அதற்கான முயற்சியை செய்தார் என்பதுதான் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. கடந்த மாதம் இறுதியாக நடாத்தப்பட்ட மத்திய விளையாட்டுக் கழகத்தின் பொதுக் கூட்டத்தில் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் முடியும் காலம் வரையில் தலைவராக இருக்கும் ரூபாதரன் அவர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளராக இருப்பதன் காரணமாக தனது பொறுப்புக்களில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கி உபதலைவரிடம் பொறுப்புக்கள் ஒப்படைக்கப் படுகின்றது. என்று. அதற்குப் பிறகு தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனி வேட்பாளர் ரூபாதரனை அணுகி மைதான அனுமதி கேட்டது தவறு. சரி அவருக்கு அந்தச் செய்தி தெரியாது இருக்கலாம் என்று வைத்துக் கொள்வோம். முதல் தடவை ரூபாதரனை அணுகியபோது குறித்த செய்தி அவருக்கு ரூபாதரனால் சொல்லப்பட்டு. உபதலைவர் அல்லது செயலாளரை அணுகுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பிறகும் இரண்டாவது தடவை ஏன் அவர் ரூபாதரனிடம் சென்று மைதான அணுமதி கோர வேண்டும். இது அவர்கள் இருவருக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவிவந்த குடும்பரீதியான பகையின் விளைவு செல்வாக்குச் செலுத்துகின்றது என்பதனை தாங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
    இமையாணன் மத்திய விளையாட்டுக்கழகம் எந்தக் கட்சியும் சார்ந்தது இல்லை. அது ஒரு பொது அமைப்பு. எந்தக் கட்சி சார்ந்தவரும் முறைப்படி அணுகி மைதானத்தினைப் பயன்படுத்திக் கொள்ளடுடியும். ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனத்தினை எவ்விதம் அணுகுவது என்ற நாகரீகம் தெரியாதவரைத்தான் தமிழ்தேசிய மக்கள் முண்ணனி தனது வேட்பாளராக கொண்டுள்ளது. ஏனெனில் ஒரு நிர்வாகரீதியான அமைப்பினை அணுகும்போது கடிதம் மூலம் அணுகியிருக்க வேண்டும். இன்றுவரை அத்தகைய கடிதம் குறித்த அமைப்பு வேட்பாளரால் எமது விளையாட்டுக்கழக நிர்வாகத்திடம் சேர்ப்பிக்கவில்லை. விளையாட்டுக்கழகம் என்பது தனியே தலைவரை மட்டும் கொண்டு இயங்குவதில்லை அதற்கு ஒரு நிலையான கட்டமைப்புடைய நிர்வாகம் உண்டு. நிர்வாக ரீதியாக அணுகுவதற்கு என்று செயலாளர் உண்டு. குறித்த வேட்பாளர் மைதானம் தான் வேண்டும் என்றால். அதற்கேற்றாற்போல் அணுகியிருக்கலாம். ஆனால் தனக்கு எதிர்நிலையில் வேட்பாளராக ரூபாதரன் நிற்கின்றார் என்று தெரிந்தும். மீண்டும் மீண்டும் அவரிடம் சென்று மைதானமத் கோரியது மிகவும் தவறு. அவருக்கும் சுதந்திரக்கட்சி வேட்பாளர் ரூபாதரனுக்கும் இடையில் நிகழ்ந்த பிரச்சனைக்கு மைதானம் காரணம் அல்ல மைதானத்தை வைத்து தமிழ்தேசிய மக்கள் முண்ணனி வேட்பாளர் தங்களுடைய தனிப்பட்ட குடும்பரீதியான காழ்பபுணர்வினை தீர்த்துக் கொண்டுள்ளார். அவர் சரியானவகையில் கடிதம் மூலம் செயலாளரை அணுகியிருந்து அவருக்கு மைதானம் இல்லை என்று கூறியிருந்தால் மட்டுமே குறித்த பிரச்சனைக்கு இமையாணன் மத்திய விளையாட்டுக் கழகம் பொறுப்பாக அமைய முடீயும். இன்றுவரை அவர் மைதானத்தினை பெற்றுக்கொள்வதற்குரிய சரியான முயற்சிகளை எடுக்கவில்லை. பிரச்சினை பெரிதானதன் பின்னர் குறித்த வேட்பாளர் எமது விளையாட்டுக் கழகச் செயலாளரிடம் சென்றுள்ளார். (அப்போதும் அவர் கடிதம் கொண்டு செல்லவில்லை) கடிதத்தினை உபதலைவரிடம் அல்லது உப செயலாலளரிடம் கொடுங்கள் நிச்சயம் நிர்வாகத்தில் கதைத்து மைதானம் தருகின்றோம் என்று கூறியுள்ளார் அதன் பின்னரும் குறித்த வேட்பாளர் எந்தவகையான முயற்சியும் செய்யாமல் செய்தியை மட்டும் பரப்பியுள்ளார். எனவே தான் நாங்கள் குறிப்பிடுகின்றோம் சிலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளரும்க்கும் தமிழ்த்தேசிய மக்கள் முண்ணனி வேட்பாளரும் இடையில் நிகழ்ந்த தனிப்பட்ட பிரச்சனை. இதற்கு தமிழ் தேசிய மக்கள் முண்ணனி வேட்பாளர் இமையாணன் மத்தியவிளையாட்டுக் கழகத்தினை பகடைக்காயாகப் பயன்படுத்தியுள்ளார். இத்தகைய வேட்பாளரை தெரிவுசெய்த தமிழ் தேசிய மக்கள் முண்ணனியினர் வேட்பாளர் தெரிவின்போது சற்று யோசித்திருக்கலாம். தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு ஒரு மாற்றீடாக மக்கள், தமிழ்தேசிய மக்கள் முண்ணனியினரை யோசிக்கும் தற்போதைய சூழலிழல் இப்படியான வேட்பாளர்கள் அந்த எண்ணத்தினை சிதைப்பது மன வேதனைக்குரியது. இவ்வாறான ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படாத செய்திகளை வெளியிட்டு தாங்களும் தங்கள் செய்தி நிறுவனத்தை மலினப்படுத்த வேண்டாம்.
    த.விஜயசங்கர்.
    இமையாணன் மத்திய விளையாட்டுக் கழக நிர்வாக உறுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*