சாட்டியின் நிலை !

சாட்டியின் நிலை !

தீவுப்பகுதியிலே உல்லாச பிரயாணிகள் விரும்பக்கூடிய மூன்று பிரபலமான கடற்கரைகள் ( beach ) காணப்படுகின்றன .

காரைநகர் கசூரினா பீச் , வேலணை சாட்டி பீச் , நெடுந்தீவு மணல் பீச் என்பனவே அவை .

இவற்றிலே இலங்கை தமிழரசு கட்சியின் ஆளுகையின் கீழிருந்த காரைநகர் பிரதேச சபைக்குரிய கசூரினா பீச் உடன் ஈபிடீபியின் ஆளுகையின் கீழிருந்த ஏனைய இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் உண்மையான அபிவிருத்தியை யார் மேற்கொண்டிருக்கின்றார்களென்று தெளிவாக புரிந்துகொள்ளலாம் .

கசூரினா – சாட்டி இரண்டுமே சிறந்த கடற்கரைகள் தான் .

இன்னும் சொல்லப்போனால் வெளிநாட்டு பிரயாணிகள் வெள்ளை கடற்கரை எனும் சாட்டியையே பெரிதும் விரும்புவர் .

ஆனால் அந்த கடற்கரை சுத்தம் செய்யப்படாமல் பற்றைக்காடுகள் நிறைந்தும் , அழுக்குகள் நிறைந்தும் , தகுந்த பராமரிப்பின்றியும் காணப்படுவதால் தற்போது பெரும்பாலானவர்கள் கசூரினாவையே விரும்புகின்றனர் .

சாட்டியில் குளிப்பதற்கென்று அலாதியான விருப்பத்தோடு வாகனங்களில் வருபவர்கள் அதன் அசுத்த நிலையை பார்த்துவிட்டு கசூரினாக்கு செல்வோமென்று உடனே புறப்பட்டு செல்வதாக அப்பகுதியிலுள்ள சிறு வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர் .

இந்த கட்டடத்தை அவதானியுங்கள் .

இது சாட்டியிலுள்ளது , பல வருடங்களுக்கு முன்பு வேலணை பிரதேச சபையால் சிற்றுண்டி சாலை ( canteen ) எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டாலும் சில மாதங்களிலேயே கைவிடப்பட்டு நீண்டகாலமாகவே இந்தநிலையிலே காணப்படுகின்றது .

சாராய , பியர் போத்தல்கள் உடைந்த நிலையிலும் குப்பைகள் நிறைந்தும் காணப்படுகின்றது .

நெடுந்தீவு மணல் கடற்கரையும் பற்றைகள் , முள்ளுகள் நிறைந்தே காணப்படுகின்றது . எதிர்வரும் தேர்தலில் தீவகத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முழுமையாக வெற்றிபெறுமானால் மேற்படி கடற்கரைகள் முழுமையாக சீராக்கப்படுவதோடு , ஏனைய தீவுகளிலுள்ள கடற்கரைகளும் , பருத்தி தீவு , சிறுத்தீவு , கண்ணாத் தீவு , நரயாம்பிட்டி தீவு போன்ற சிறிய தீவுகளும் உல்லாச பிரயாணிகளை கவரும் வகையில் செழுமையாக்கப்பட்டு தீவக சுற்றுலாத்துறை இலங்கையின் முன்மாதியாக விளங்குவதோடு தொழில்வாய்ப்புக்கள் , வேலைவாய்ப்புக்களும் உருவாக்கப்படும் .

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 48

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*