சிறிதரனின் ஊதுகுழல் சிவேந்திற்கு சீற் கிடைக்காததால் கொள்கை பற்றி பேசுது

கிளிநொச்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழரசு கட்சியில் உள்ளுராட்சி
தேர்தலில் போட்டியிடுவதற்காக சீற்றுக்காக காத்திருந்தவர்கள் பலர் அதில்
சிறிதரன் எம்.பியின் ஊடக ஊதுகுழலான பரந்தனை சேர்ந்த சிவேந்திரன் என்;பவரும்
ஒருவர். தேர்தலில் போட்டியிடுவதென்றால் அதற்கு ஒரு முகம் வேன்டும் இவன்ர
முகத்துக்கு வோட் விழுமா. இவன் மக்களுக்கு என்ன சேவை செய்தவன். கட்சிக்கு என்ன
பணி செய்தவன் எதுவும் இல்லை இப்படி கண்டவன் நிண்டவன் எல்லாம் எங்களை சீற் தா
என்று கேட்டால் நாங்கள் சீற்றுக்கு எங்க போறது இப்ப தனக்கு சீற் தரவில்லை
என்பதனால வெளியில் நின்று கட்சியையும் விமர்சித்து எங்களையும் குற்றம்
சாடடிக்கொண்டு கொள்கை பற்றி பேசித் திரிகிறார் கொள்கை என்றால் என்னவென்று
இவனுக்கு தெரியுமோ என்று கூறி விசனப்பட்டார் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி
மாவட்ட அமைப்பாளர் அ.வேழமாலிகிதன்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்வீட்டுப் புடுங்குப்பாடுகள் பிரச்சனைகள் பல
தற்போது வெளிவர ஆரம்பித்துவிட்டன. கிளிநொச்சியில் தாம் மட்டுமேதான் தமிழ்
தேசியவாதிகள் மற்றவர்கள் ஒட்டுக்குழுக்கள் எனக்கூறி திமிர்தனமாக திரிந்த
ஒருவர்தான் இந்த சிவேந்திரன் ஆசிரியர் இவர் பற்றிய தகவல்களை இவரது நன்பரான
தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் வேழமாலிகிதன் கூறுகின்றார்
கேட்டுப்பாருங்கள். கிளிநொச்சியிலுள்ள எங்கள் கட்சி அலுவலகத்திற்கு அடிக்கடி
வந்து செல்லும் சிவேந்திரன் தனக்கு ஏதாவது வேலை தரும்படி பல தடவைகள்
கேட்டுக்கொண்டதற்கு அமைவாக பாவம் பார்த்து எமது பாராளமன்ற உறுப்பினர்
சிறிதரனால் கடிதங்கள், அறிக்கைகள், செய்திகளை அடிப்பதற்கான மற்றும் அலுவலகப்
பணி என்பன வழங்கப்பட்டு மாதாந்தம் 30000 ரூபா சம்பளமும் சாப்பாடும் ஒழுங்க
வழங்கப்பட்டு வந்தது. வழங்கப்பட்ட வேலைகளை ஒழுங்கு முறைப்படி செய்து முடிக்கத்
தெரியாது கடிதங்கள், அறிக்கைகள், செய்திகளில் எழுத்துப் பிழைகள் பல பிழைகள்
விட்டே அடிப்பார் அதனை நாம் பிழை என கூறினால் ஏற்றுக்கொள்ளாமல் எங்களுடன்
கோபப்பட்டு முரண்படுவான். உன்ர அணுகுமுறையே பிழை அதை மாற்று என்று கூறினாலும்
அதனையும் ஏற்றுக்கொள்ள மாட்டான். பலருடனும் ஒரே கொழுவல்தான் இதனால ஒருவரும்
இவனுடன் கதைப்பதில்லை. ஆனால் சம்பளம் ஒரு நாள் பிந்தினாலும் 30000 ரூபாவையும்
வை என்று விடாப்பிடியா நின்று வாங்கிப்போடுவான். இதுக்குள்ள இவர் தன்னை ஒரு
ஊடகவியலாளர் என்றும் கூறிக்கொண்டு திரிவார். ஆனால் நாம் இங்கு சொல்லும்
செய்திகளை எழுதி நாங்கள் எழுத்துப் பிழை சாரி பார்த்துத் திருத்திய பின்பே
அனுப்பி அதிலும் குறிப்பிட்ட சம்பளம் பெற்று வந்தார். இப்படியானவர்தான் இப்ப
உள்ளுராட்சி சபை தேர்தலில் தான் பரந்தன் வட்டாரத்தில் போட்டியிடப் போகிறேன்
சீற் தாருங்கள் என்று பல தடவைகள் கேட்டு எங்களை ஒரே ஆக்கினைப்படுத்தி
திரிந்தார். எமது கட்சியின் முடிவின் படி கிராமங்களை அபிவிருத்தி செய்யக்கூடிய
ஆளுமையான வேட்பாளர்களைதான் நாம் நிறுத்த முடியும் இப்படியானவர்களை நாம்
நிறுத்திப்போட்டு எமது கட்சி என்ன தோல்லியடைய அனுமதிப்பதோ இவர்ர முகத்துக்கு
யார் வோட் போடுவார்கள்? அந்த வகையில் பரந்தன் வட்டாரத்து மக்களின்
விருப்பப்படியும் பரந்தன் பொது அமைப்புகளின் விருப்புப்படியும் நீண்ட காலம்
மக்களுக்கான பொதுச் சேவையில் தன்னை அர்ப்பணித்தவரும் எமது கட்சிக்காக காலநேரம்
பார்க்காது நீண்ட காலமாக உழைத்தவருமாகிய ஆளுமையுள்ள வேட்பாளராக விக்டர்மான்
சாந்தி அவர்களை நாம் தேர்ந்தெடுத்து நாம் நிறுத்தியுள்ளோம். இதால தனக்கு சீற்
கிடைக்காததாலை ஆத்திரமடைந்த சுவேந்திரன் இப்ப கட்சிக்கு வராமல் வெளியில நிண்று
கொண்டு எமது வேட்பாளர்களையும் கட்சியையும் கண்டபடி வீண்பளி சுமத்தி
குற்றம்சாட்டி திரிகிறார். இவன் கோபிச்சுக் கொண்டு போகும்போது எமது
அலுவலகத்தில கிடந்த இரண்டு பெறுமதியான கமராக்கள் உட்பட்ட பல பொருட்களையும்
தூக்கிச் சென்று இன்னும் திருப்பித் தராமல் தன்வசம் வைத்திருக்கிறார்.
இவனெல்லாம் ஒரு மனிசனா பொறுக்கி பொறுத்த நேரத்தில இப்படிச் செய்துள்ளான். இவனை
நம்பி எங்கட அலுவலகத்தில நாம் வைத்திருந்தமே இவனை இயக்கிறது வேறு யாரோ இவன்
வேறு யாற்றையோ நிகழ்சி நிரலில்தான் இங்கு புகுந்து எங்களுடன் சேர்ந்திருந்தவன்
என்று கூறி தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் அ.வேழமாலிகிதன்
விசனப்பட்டுக்கொண்டார்.
சின்னராசா சிவேந்திரன் தன்னை ஒரு ஊடகவியலாளர் என வெளியில் இனங்காட்டிக்கொண்டு
கிளிநொச்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழரசு கட்சியுடன் இணைந்து இவர்
தம்மைவிட யாரும் தமிழ் தேசியவாதிகள் இல்லை தாமேதான் உண்மையான தமிழ்
தேசியவாதிகள் எனவும் தம்மை விமர்சிப்பவர்கள் ஒட்டுக்குழுவைச் சேர்ந்தவர்கள் என
கூறி ஒட்டுக்குழுப்பட்டம் வழங்கி தம்மை யாரும் எதுவும் புடுங்க முடியாது
என்னும் நினைப்பில் மிகவும் திமிர்தனமாக திரிந்தவர் இவர் கூட்டமைப்பு எம்.பி
சிறிதரனின் ஊதுகுழல் ஊடகவிலாளராகச் செயற்பட்டு பலரையும் விமர்சித்து பல
அவதூறுக் கட்டுரைகளையும் செய்திகளையும் எழுதி பரப்பிவந்தவர். இவர் பற்றிய
முதல் கட்டம் இது இன்னும் வெளிவரும்.
Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*