நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கடுமையாக விமர்சித்தார் Fool

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவி லில் தேர்தல் பரப்புரை இடம்பெற்ற தாக குற்றஞ்சாட்டப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சட் டத்துக்கு முற்றும் முரணான தீர்ப்பை வழங்கியுள்ளார் என பகிரங்கமாக விமர்சித்துள்ள  தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ரட்ண ஜீவன் fool, நீதவான் எம்மை தடுத்தாலும் நீதி யின்படி அதை எதிர்ப் போம் எனவும் தெரிவித் துள்ளார்.
மேலும் இந்த வழக்கு விசாரணையின் போது எதிர்தரப்பால்  பொலிஸா ருக்கு கையூட்டல் வழங் கப்பட்டுள்ளது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேற்குறித்த விடயம் தொடர்பில் ஊடகவியலா ளர் சந்திப்பு ஒன்று நேற் றும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. அதில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் இவ்விடயம் தொடர் பில் கருத்து தெரிவிக்கை யில், ஆணைக்குழுவில் எனது கடமை தேர்தல் சட்டங்களை பேணுவது குறிப்பாக எந்த கட்சி என்றாலும் சட்டங் களை மீறினால் அதை நிறுத்துமாறும், முறைப்பாடுகள் வந்தால் அதன்படி நட வடிக்கை எடுக்குமாறும் யாப்பில் சொல் லப்பட்டுள்ளது.
கட்சிகளைப் பற்றிய முறைப்பாடு எமக்கு கிடைத்துள்ளது, நடவடிக்கை எடுத்து
வருகிறோம். எந்த கட்சி சட்டத்தை மீறினாலும் அதை தடுப்பது எமது  கடமை. அந்த கடமையை  கேள்விக் குறியாக்குவது எமது வேலையை செய் வதற்கு தடையாக இருக்கிறது. மல்லா கம் நீதிமன்று மேற்குறித்த வழக்கில் இவ்வாறு அவ சரமாக செயற் பட்டது  ஏன் என் பது கேள்வியாக உள்ளது.
தமிழ்த் தேசிய பேர வையினரின் தேர்தல் விஞ் ஞாபன வெளி யீடு மாவட்ட புரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்றுள்ளது. அதில் ஐயரையும் அழைத் துள்ளார்கள். குறித்த விடயம் முகப்புத்தகத் திலும் பத்திரிகை களிலும் பிரசுரமாகி யுள்ளது. அதற்கான ஆதாரம் எம்மிடம் உள்ளது.
அவை அனைத் தும் முறைப்பாட்டா ளரால் பொலிஸார ருக்கு கொடுக்கப்பட் டுள்ளது. பொலிஸார் ஏன் நீதிமன்றுக்கு அவற்றை  காண்பிக்க வில்லை.
500 ரூபாயுக்கு பொலிஸை வைத்து என்னவும் செய்லாம் என்பது வழமை.
Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*