ஒப்ரேசன் “K” – மாட்டைக் கடத்தும் கும்பல்கள் கைது!!!!!!

புங்குடுதீவிலும், தீவகத்திலும் கடந்த காலமாக மாடுகளைக் கொன்று கடத்தி வரும் கும்பல்கள் பெருகிக்காணப்பட்டன. சமூக ஆர்வலர்கள் பலமுறை கையும் களவுமாக சில மாடு கடத்துபவர்களை காவல்துறைக்கு இனம் காட்டிய போதும் முக்கிய கடத்தல்காரர்களை கையும் களவுமாக பிடிக்க முடியவில்லை. இதற்காக ஒரு தன்னார்வ குழு #ஒப்ரசேன் K எனும் திட்டத்தோடு, அரச காவல்துறை உளவாளிகளின் உதவியோடு களம் இறங்கியது.

கடந்த இரண்டுமாதமாக கடத்துபவர்கள் கண்கானிக்கப்பட்டு அவர்களது திட்டமான உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்பான மாடு கடத்தும் திட்டம் அறியப்பட்டு, புங்குடுதீவு தொடங்கி யாழ் பண்ணைவரை இருபதிற்கும் மேற்பட்ட தீவக இளைஞர்களும், பத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினரும் களத்தில் நிறுத்தப்பட்டிருந்தனர். தம்மை சுற்றி என்ன நடக்கிறது எனப்புரியாத கும்பல் பிடித்த மாடுகளை வாகனத்தில் ஏற்றத்தொடங்கினார்கள். அவர்கள் வெளிக்கிடத் தொடங்கியதும் தகவலை அரனில் நின்றவர்களிடம் வழங்கிவிட்டு கண்காணிப்பு குழ பின்தொடர்ந்தது. திட்டத்தின் படி பண்ணையில் மறிக்க திணறியடித்துக் கொண்டு தங்களது இருப்பிடமான ஐந்துமூலச்சந்தியை நோக்கி விரைந்தார்கள் அங்கு ஏற்கனவே கண்காணிப்பு குழு பதுங்கியிருந்தமை தெரியாமல். உள்ளே சென்றவர்கள் தப்பித்தோம் என்ற பூரிப்பல் சிறிது நேரத்தில் மாட்டை வெட்ட வெளிக்கிட்டனர. உள்ளே புகுந்த கண்காணிப்புகுழு மாடு வெட்டிக்கொண்டிருந்த முஸ்லீம் இளைஞரையும், அங்கு நின்றவர்களையும் மடக்கி பிடிக்க வருகை தந்த காவல்துறை அவர்களை கைது செய்தது.

இவர்களிற்கு மாட்டை பிடித்து கொடுத்தவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். இத்திட்டத்தில் ஒருங்கிணைந்து செயற்பட்ட தீவக சமூக அக்கறை கொண்ட இளைஞர்களிற்கும், உளவுத்துறை அதிகாரிகளிற்கும் எமது நன்றிகள்.

கண்காணிப்பு & களையெடுப்பு எனும் #ஒப்ரேசன் “K” நடவடிக்கை தொடரும்…

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 69

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*