பிரதமரின் மகாசிவராத்திரி தின வாழ்த்து செய்தி

மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு இந்துக்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வளமானதொரு எதிர்காலத்திற்கான தமது எதிர்பார்ப்புக்கள் நிறைவேற இலங்கைவாழ் இந்துக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மகா சிவராத்திரி தினச்செய்தி

மகா சிவராத்திரி எனும் புனிதமான விரதத்தை அனுஷ்டிக்கும் உலகெங்கிலுமுள்ள இந்துக்களுடன் இணைந்துகொள்ளும் இலங்கை வாழ் இந்துக்களுக்கு இந்த வாழ்த்துச் செய்தியைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

ஆதியும் அந்தமுமில்லா அருட்பெரும் பரமசிவனைப் போற்றி வழிபடும் இத்தினத்தில் இருள் நீங்கி அறிவுஞானம்தளைத்தோங்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் இரவு பூராகவும் இந்து பக்கதர்கள் விரதமிருந்து புண்ணிய கருமங்களில் ஈடுபடுவதுடன் சிவராத்திரி விரதத்தை அனுட்டிப்பதன் ஊடாக ஆன்மீக விமோசனம் கிடைக்கும் என்பது இந்துக்களின் உயர்வான நம்பிக்கையாகும்.

அனைத்து உயிர்களிடத்தும் அன்பு பாராட்டி அதனூடாக இறைவனைக் காணும் உயரிய இந்து பாரம்பரியத்தைக் கொண்ட இலங்கைவாழ் இந்துக்கள் இலங்கையிலுள்ள ஏனைய சமூகங்களுடன் ஐக்கியத்துடனும் நட்புறவுடனும் வாழும் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளனர். இப்புனிதமான விரதத்தை ஆன்மீக உணர்வுடனும் பக்திசிரத்தையுடனும் கடைப்பிடித்து எமது இந்து மக்கள் நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வினூடாக ஐக்கியத்திற்கான அவர்களது தேடலில் மேலும் பலத்தைப் பெற்றுக்கொள்வர்.

மகா சிவராத்திரி தினத்தில் வளமானதொரு எதிர்காலத்திற்கான தமது எதிர்பார்ப்புகள் நிறைவேற இலங்கைவாழ் இந்துக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன்இ அர்த்தம் பொருந்திய பக்திபூர்வமான சிவராத்திரி தினமாக அமைய வேண்டுமெனவும் பிரார்த்திக்கின்றேன்.

ரணில் விக்கிரமசிங்க
பிரதம அமைச்சர்

2018. 02. 12

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*