சுற்றுலாப்பயணிகளுக்காக அழகுபடுத்தப்பட்டுள்ள பருத்தித்துறை ‘சக்கோட்டை’

பருத்தித்துறை ‘சக்கோட்டை’ கடல் பிரதேசத்தை பார்வையிடும் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியின் பணிப்புரைக்கமைய மேற்கொள்ளப்பட்டன.

இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் 55 ஆவது படைப் பிரிவின் இராணுவ ஒத்துழைப்புடன் இந்த கடல் பிரதேசத்திலுள்ள பொலித்தீன் மற்றும் கடலோர பிரதேசங்களிலுள்ள குப்பை கூழங்கள் அகற்றப்பட்டன.

மேலும் இப்பிரதேச வளாகம் இராணுவத்தினரது பூரண ஒத்துழைப்புடன் அலங்கரிக்கப்பட்டு தேசிய கொடிகள் ஏற்றி அண்மையில் யாழ் பாதுகாப்பு படைத்தளபதியினால் திறந்து வைக்கப்பட்டது.

இப்பிரதேச வளாகத்தை அழகுபடுத்துவதன் மூலம் சுற்றுலா பயணிகள், விற்பனையாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு உறுதுணையாயுள்ளது.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதியின் பணிப்புரைக்கமைய 55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஜயந்த குணரத்ன தலைமையில் இந்த பணிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிகழ்வில் 55 ஆவது படைப் பிரிவின் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இப்பிரதேச வாழ்மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 50

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*