கரிகோச்சி (Viceroy ) புகையிரதம் யாழ்ப்பாணம் வருகை

நீண்ட கால இடைவெளியின் பின்னர் இரண்டாவது முறையாக இன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் கரிகோச்சி (Viceroy ) புகையிரதம் யாழ்ப்பாணம் வருகை தந்தது.

அநுராதபுரம் ரயில் நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கு வருகை தந்தது.

இந்த ரயில் யாழ்.ரயில் நிலையத்தை 4 மணியளவில் வருகை தரும் என சொல்லப்பட்டாலும் ஆனையிறவில் வந்துகொண்டிருந்தபோது இயந்திரக் கோளாறு காரணமாக நிண்டநேரம் நிறுத்தப்பட்டு பின்னர் அது சீர் செய்யப்பட்டு யாழ்ரயில் நிலையத்திற்கு 7 மணியளவில் வருகை தந்தது.

காங்கேசன்துறை ரயில் நிலையத்திற்கு நாளை செல்லவிருந்த நிலையில் அங்கு செல்லாதெனவும்  10 மணிக்கு யாழ்.ரயில் நிலையத்திலிருந்து சுற்றுலாப்பயணிகளுடன் கல்கிசை நோக்கி செல்லவுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பயணிப்பதற்கு ரயிலில் நான்கு AC சொகுசு ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதுடன் நீண்ட காலத்திற்கு பின்னர் வந்த இந்த கரிக்கோச்சி ரயிலினைப் பார்ப்பதற்கு சிறுவர்கள் பெரியவர்கள் என வருகை தந்து பார்த்து புகைப்படங்கள் எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 15

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*