TNAயின் காட்டுப்பகுதி கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

தருமபுரம் பொலிஸ் நிலையப் பிரிவில் உள்ள கல்மடுக் காட்டுப் பகுதியில் சட்ட விரோதமான முறை யில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதேசசபை உறுப்பினர்களால் நடாத்தபட்டு  வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை கைப்பற்றி 80 லீற் றர் கசிப்பையும் மற்றும் கசிப்புக் காய்ச்சுவதற்குப் பயன்படுத்திய உப கரணங்களுடன் சம்பவ இடத்தில் வைத்து சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்த பின்னர் கசிப்பு உற்பத்தி நிலை யத்தை நிர்மூலமாக்கி உள்ளதாக கிளிநொச்சிஃ முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபரின் அலுவலகத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்ப வம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற்றுள்ளது,
இது தொடர்பில் மேலும் தெரியவருவது,  கிளிநொச்சிஃ முல்லைத்தீவு ஆகிய மாவ ட்டங்களுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிகன்னவின் விசேட உத்தரவு க்கு அமைய தருமபுரம் பொலிஸ் நிலையப் பிரிவில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் விசேட  ஊர்சுற்றுக் காவல் கடமை யில் ஈடுபட்டிருந்த கிளிநொச்சிஃமுல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கான போதைப் பொருள் தடுப்பு மற்றும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் படைப் பிரிவுப் பொலிஸாரு க்கு  கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலைய டுத்து வட்டக்கச்சி கல்மடுக் காட்டுப் பகுதியில் சட்ட விரோதமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை கைப் பற்றி 80 லீற்றர் கசிப்புடன், கசிப்புக் காய்ச்சுவதற்குப் பயன்படுத்திய உபகரணங்களைக் கைப் பற்றியுள்ளதுடன் சம்பவ இடத்தில் வைத்து சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்த பின் னர் கசிப்பு உற்பத்தி நிலையத்தை பொலி ஸார்  நிர்மூலமாக்கி உள்ளனர்.
இச் சம்பவத்தில் கைப்பற்றப்பட்டுள்ள தடயப் பொருட்களுடன் சந்தேக நபரை தரும புரம் பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசா ரணைகளுக்காகவும் அதன் பின்னரான நீதி மன்ற நடவடிக்கைகளுக்குமாக ஒப்படைத் துள்ளதாக கிளிநொச்சிஃமுல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபரின் அலுவலகத் தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*