உங்கள் ஈரலிலிருந்து நச்சுகளை வெளியேற்றி சுத்தப்படுத்தலாம் !!

பொதுவாக நாம் இதயத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஈரலுக்கு கொடுப்பதில்லை . ஏனெனில் இதயம் வேலை செய்வது நின்றால் நம் உயிர் உடலில் தங்காது என்பதாலேயே இந்தப் பயம் . ஆனால் இதயத்தை , ஈரலுடன் ஒப்பிடும் போது இதயத்தின் இயக்கம் சாதாரணமானதுதான் . இதயம் ஓயாது சுருங்கி , விரிந்து இயங்கும் சதைப் பிண்டமே , ஆனால் ஈரல் ஒரு வேதியியல் தொழிற்சாலை போல் ஓயாது இயங்குகிறது.ஈரல் வேலையை நிறுத்திவிட்டால் நாம் ஒரு இரு சக்கர வாகனப் புகையே நம்மைக் கொல்லப் போதுமானது. உடலின் செயல்பாடுகள் அனைத்திற்கும் முக்கிய காரணியாக இருக்கும் உறுப்பு ஈரல்தான்

கிராமங்களில் சொல்வார்கள் எனக்கு அந்த கடுமையான சமயத்தில் ஈரக் குலையே நடுங்கிவிட்டது என்பார்கள் .அதாவது ஈரல் என்பது உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டது. காரணமற்ற கவலை (கவலையே இல்லை என்று கவலைப்படுவார்கள் ) ஈரல் குறைபாட்டின் அறிகுறி.

உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு. ஒரு வேளை கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், உடனே அதற்கு சரியாக சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.அல்லோபதி மருந்துகளே அதிகம் கல்லீரலைக் கொல்லுபவை . ஏனெனில் அவை கடும் விஷம் கொண்டவை . அவை கொடுக்கும் நோக்கத்தை நிறைவேறுகிறதோ இல்லையோ கடைசியில் அவை கல்லீரலில் அவை விஷமாக தங்கி ஈரலை அதிகம் கொல்லுகின்றன.

இந்த மாதிரி கல்லீரல் பாதிப்படைவதற்கு ஆல்கஹால் அதிகம் குடிப்பது, அதிகமான கொழுப்புள்ள உணவுகளை சாப்பிட்டு, அதனால் கல்லீரலில் கொழுப்புக்கள் அதிகம் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பசித்த பின் சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருந்தாலும் , கல்லீரலில் கொழுப்புகள் அதிகரித்துவிடும்.

கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், என்னென்ன அறிகுறிகள் இருக்கும் என்பதைக் கீழே காண்போம்!!

வாய் துர்நாற்றம்:

கல்லீரலானது சரியாக இயங்கவில்லையெனில், வாயிலிருந்து கடுமையான நாற்றம் வரும். ஏனெனில் அப்போது உடலில் அம்மோனியாவானது அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கும். வாய்துர்நாற்றம் சாதாரணமானது என்று பற்பசை விளம்பரங்களில் வருவதைப் பார்த்தால் , மக்களை எவ்வளவு முட்டாள்களாக நினைக்கிறார்கள் என்று தோன்றுகிறது .

கண்களைச் சுற்றி கருவளையம் மற்றும் சோர்வான கண்கள் மற்றும் பார்வைக்குறைபாடுள்ள கண்கள்

கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், தோலில் பாதிப்பு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். அதிலும் குறிப்பாக கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்பட்டு, சுருக்கங்களோடு காணப்படும்.

செரிமானப் பிரச்சனை அதிகம் ஏற்படும் .எண்ணெய்ப் பண்டங்களையும், கொழுப்புப் பொருட்களையும் சாப்பிடும் சமயம் அதிக நெஞ்செரிச்சல் உண்டாகும் .கல்லீரலில் கொழுப்பானது அதிகம் சேர்ந்திருந்தால், தண்ணீர் சரியாக வெளியேறாமல் இருப்பதால் கல்லீரல் வீக்கமடையும் ,இதனால் மேல் வயிறு வீக்கமடையும் . இத்தகைய பிரச்சனை உடலில் தெரிந்தால், அது கல்லீரல் பழுதடைந்துள்ளதற்கான அறிகுறியாகும்

வெளுத்த சருமம்:

கல்லீரலில் பாதிப்பு இருந்தால், சில சமயங்களில் சருமத்தில் உள்ள மெலனின் நிறமிகள் நிறமிழந்து, சருமத் தோலானது திட்டுதிட்டாக ஆங்காங்கு வெள்ளையாக காணப்படும்

அடர்ந்த சிவந்த மற்றும் மஞ்சள் நிற சிறுநீர் மற்றும் கழிவுகள்:

உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள் அடர்ந்த கரு நிறத்தில் இருக்கும். இந்த மாதிரி எப்போதாவது ஏற்பட்டால், அதற்கு உடலில் வறட்சி என்று அர்த்தம். ஆனால், தொடர்ச்சியாக இருந்தால், அது கல்லீரல் பழுதடைந்ததற்கான அறிகுறியாகும்.

மஞ்சள் நிற கண்கள்:

கண்ணில் உள்ள வெள்ளை பகுதி மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால், அது மஞ்சள் காமாலையாக இருக்கலாம். அதாவது கல்லீரலில் தொற்று ஏற்பட்டுள்ளது,அல்லது பித்தப்பையில் உள்ள பித்த நீர் (இதுதான் மஞ்சள் நிறத்தை அளிக்கிறது )உடலில் கலந்து , உடலை விஷமித்த நிலைக்குக் கொண்டு செல்கிறது என்று பொருள் , பித்தப்பையில் கல் உண்டாகி பித்தப்பையின் வாயிலை அடைத்துவிட்டாலும் இது நிகழும்.எனவே அதற்கேற்ப முறையான சிகிச்சை செய்ய வேண்டும்.

வாய் கசப்பு:

கல்லீரலில் பித்தப்பையில் பைல் என்னும் நொதியானது உற்பத்தி செய்யப்படும். அந்த பைல் நொதி தான் கசப்பான சுவையை ஏற்படுத்துகிறது. எனவே வாயில் அதிக கசப்பு இருந்தால், கல்லீரலில் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

இப்பொழுது ஈரலை எவ்வாறு சுத்தம் செய்வது என பார்ப்போம்.

உலர்ந்த திராட்சை எனப்படும் கிஸ்மிஸ் உங்கள் ஈரலை சுத்தப்படுத்தும் ஒரு எளிய மருந்தாகும்.

காலையில் எழுந்தவுடன் அரை கப் உலர்ந்த திராட்சயை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு நன்றாக கழுவவும். மறுபடியும் சூடாக்கி ஆறவைத்த தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைக்கவும்.

அடுத்த நாள் காலையில் முதலில் வெறும் வயிற்றில் ஊறவைத்த தண்ணீரை குடிக்கவும். அத்துடன் ஊறவைத்த உலர்திராட்சையையும் சாப்பிடவும். பிறகு படுக்கையில் ஒன்றரை மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரம் ஒரு பாட்டிலில் மிதமான சூடு தண்ணீர் நிறைத்த ஹாட் வாட்டர் பேக் அல்லது பாட்டில் கொண்டு வலது பாகம் வயிற்றில் சூடுபடும் படியாக கிடந்து ஒய்வெடுக்க வேண்டும்.

இவ்வாறு வாரத்தில் ஒரு நாள் வீதம் ஒரு மாதம் செய்யவும். இந்த முறையில் வருடத்தில் இரண்டு தடவை மட்டும் செய்ய வேண்டும். அதற்க்கு மேல் செய்யக்கூடாது.

ஈரல் பாதிப்பு நீங்க மற்றொரு எளிய மருந்து:

ஈரல் நோயைக் குணப்படுத்த, சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது. சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடி செய்து, அதனுடன் தேன் கலந்து காலை மாலை 1 டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால், ஈரல் நோய் குணமாகும்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 348

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*