கிளிநொச்சியில் ரிப்பருடன் ரிப்பர் மோதி விபத்து – சாரதி பலி

கிளிநொச்சி இரணைமடு சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த மற்றுமொரு டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கிளிநொச்சியை சேர்ந்த 54 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது. மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*