இளைஞன் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார்

கொடிகாமம் தவசிகுளத் தைச் சேர்ந்த சகாயநாதன் விஜிதரன் (றம ணன்- வயது32) என்னும் பெயருடையவர் கடந்த மாதம் 22-ம் திகதி கடத்தப்பட்டுக் காணாமல் போயுள்ளதாக கொடி காமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவரது பெற்றோ ரால் கூறப்படுகின்றது.
தமது மகன் அண்மையில்தான் திருமணம் செய்ததாகவும் கடந்த மாதம் 22-ம் திகதி தமது வீட்டுக்கு வந்துவிட்டு வேலைக்குச் செல்வதாகக் கூறிச் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.
எனினும் அன்றைய தினம் மாலை இறு தியாக அவரது நண்பர் ஒருவரது தொலை பேசியினூடாக தம்முடன் கதைத்ததாகவும் பின்னர் அத்தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பெடுத்தபோது அவ்விலக்கத்திலிரு ந்து தாம் அழைப்பெ டுக்கவில்லை எனக் கூறித் துண்டிக்கப்ப ட்டுள்ளது.
இது தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறை ப்பாடு பதிவு செய்யப் பட்டுள்ளதாக தாயார் சகாயநாதன் மனோ ரஞ்சிதமலர் என்பவ ரால் தெரிவிக்கப்பட் டுள்ளது.
Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 14

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*