பருத்தித் துறையிலும்: தடுத்து நிறுத்துவது யார்?

கிளிநொச்சி , பச்சிலைப் பள்ளியை தொடர்ந்து பருத்தித்துறை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையத்தை மீள இயக்குவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமத்தை தனியாரிற்கு வழங்கும் முயற்சிகள் இடம் பெறுகின்றன என்று சங்கத்தினர் குற்றஞ்சாட்டினர்

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமத்தை தனியாரிற்கு வழங்கினால் சங்கத்தை நம்பியுள்ள 60 க்கும் மேற்பட்ட ஊழியர்களுடைய வாழ்வாதாரம் இழக்கப்படுவதோடு சங்கம் மேலும் நலிவுற்று இல்லாதொழியும் நிலை ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்

போர்க் காலத்தில் வடக்கில் மக்களின் முதுகெலும்பாக இருந்த கூட்டுறவுச் சங்கங்கள் இன்று நலிவடைந்து சங்கங்களின் பணியாளர்களுக்கு வேதனம் வழங்குவதற்கே முடியாத நிலையில் உள்ளன

இந்தக் கூட்டுறவுச் சங்கங்களினால் கடந்த காலங்களில் நடத்தப்ப்ட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான அனுமதிகளை மறுத்து தனியாருக்கு வழங்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது .போரிற்கு முன்னர் பச்சிலைப் பள்ளி ப.நோ.கூ சங்கத்தின் நகரின் மத்தியில் ஓர் எரி பொருள் நிரப்பு நிலையம் இயங்கியது அதற்கு எரிபொருள் கூட்டுத் தாபனத்தின் அனுமதியும் பெறப்பட்டிருந்தது. இருப்பினும் பேரின் பின்னர் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தினை நடத்த எரிபொருள் கூட்டுத்தாபனம் அனுமதி மறுத்து விட்டதுடன் அதற்காண காரணம் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைந்துள்ளள நிலம் சங்கத்துக்கு சொந்தமானது அல்ல என்பதே என்று கூட்டுத்தாபனம் கூறியது அதனால் பெரும் நிதி நெருக்கடியின் மத்தியில் இயக்கச்சிப் பகுதியில் 5 பரப்புக் காணியை விலை கொடுத்துக் கொள்வனவு செய்து அதன் உறுதியுடன் அனுமதி கோரப்பட்டது

அதன் போது கொழும்பிலுள்ள காணி ஆணையாளரிடம் அது தனியார் காணி என உறுதிப்படுத்தல் பெற்றுத் தருமாறு கோரப்பட்டது நீண்ட அலைச்சலின் பின்னர் அந்த அனுமதியும் பெறப்பட்டது அதன் பின்னரும் அனுமதி தரப்படாத நிலையில் மீண்டும் தொடர்பு கொண்ட வேளையில் அது அரச நிலமல்ல என பிரதேச செயலரிடம் கடிதம் பெற்றுச் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டது பிரதேச செயலாளரின் சிபாரிசுக் கடிதம் பெற்று வழங்கியும் இதுவரை அங்கு எரிபொருள் நிரப்பு நிலையத்தை இயங்கச் செய்வதற்கான அனுமதி கிடைக்கப் பெறவில்லை கூட்டுறவுச் சங்கத்தின் கடும் அலைச்சலின் பின்னர் கூட அனுமதி மறுக்கப்பட்டது. அதே நிலையே தற்போது பருத்தித்துறைக் கூட்டுறவுச் சங்கத்திற்கும் ஏற்பட்டுள்ளது.

பருத்தித்துறை துறைமுகத்திற்கு அருகில் அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு 1978 ஆம் ஆண்டு முதல் பருத்தித்துறை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கமே முகவராகத் தொழிற்பட்டது.

கடற்தொழிலாளர்கள் ,விவசாயிகள் மக்கள் என அனைவருக்கும் அது சிறந்த சேவையாற்றியது .1984 ஆம் ஆண்டு பெற்றோலியக் கூட்டுத்தாபானத்தின் பாராட்டையும் பெற்றது 1984 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இராணுவக் கட்டுப்பாட்டுப்  பிரதேசமாக அந்தப் பிரதேசம் அறிவிக்கப்பட்டது அதன் பின்னர் எரிபொருள் நிரப்பு நிலையம் இயங்கவில்லை தற்போது அதனை தனியாரிற்கு வழங்குவதற்கான எற்பாடுகள் இடம் பெறுகின்றது என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது .

இது தொடர்பில் சங்கத்தினர் தெரிவித்தாவது அந்த இடம் விடுவிக்கப்பட்டு மக்கள் சென்றதன் பின்னர் குறித்த எரிபொரள் நிரப்பு நிலையத்தை மீளப் பெற்றுத் தந்து இயங்கச் செய்யுமாறு அரச தலைவர் ,தலமை அமைச்சர் ,திணைக்களம் சார்ந்தவர்களுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தோம்.அதை அடுத்து அந்த எரிபொருள் நிரப்பு நிரப்பு நிலையம் மீளப் பெற்றுத் தரப்படும் என்றும் ,தவறும் பட்சத்தில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையத்தை அமைக்க அனுமதி தரப்படும் என்றும் மின்சக்தி எரிபொருள் அமைச்சாரல் உறுதியளிக்கப்பட்டது

அத்துடன் பெற்றோலியக் கூட்டுத் தாபனத்தினாலும் கடிதம் வழங்கப்பட்டது அபிவிருத்திக் கூட்டங்களிலும் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது ஆனால் தற்போது பெற்றோல் நிரப்பு நிலையத்தின் உரிமத்தை தனியாருக்கு வழங்கியுள்ளனர் என்று அறிகின்றோம்

இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் அது தொடர்பான வெகுசனப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றனர்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 230

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*