நாவற்குழி விபத்தில் குடும்பஸ்தர் பலி: கடற்படை வீரர் கைது

யாழ் நாவற்குழி பூநகரி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (27) இடம்பெற்ற இந்த விபத்தில் கடற்படை வீரர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நாவாந்துறையைச்சேர்ந்த அந்தோனி கொன்சலஸ் எனும் 36 வயதுடைய குடும்பஸ்தர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பவுசருடன் கிளிநொச்சியை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த குறித்த குடும்பஸ்தர் மோதி நிலை தடுமாறியுள்ளார்.

அப்போது தொடர்ந்து பின்னால் சென்ற கார் ஒன்றும் அவர் மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

கடற்படையினருக்கு சொந்தமான குறித்த தண்ணீர் பவுசரின் சாரதியான கடற்படை சிப்பாய் ஒருவரும் மற்றைய காரின் சாரதியும் யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தண்ணீர் பவுசர் எவ்வித சமிக்ஞைகளும் இன்றி நடு வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமையே இந்த விபத்திற்கு காரணமாக இருக்கலாமென பொலிசார் கருதுகின்றனர்.
Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 43

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*