2 விடுதலைப்புலி உறுப்பினர்க்கு மரணதண்டனை – இளஞ்செழியன் தீர்ப்பு

கொலை, கொள்ளை உட்பட 5 குற்றங்களை புரிந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் இருவர் குற்றவாளிகளாக இனம்கண்ட யாழ் மாவட்ட நீதிபதி மா. இளஞ்செழியன் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி சங்கானை முருகமூர்த்தி ஆலய குருக்களின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து ரி.56 ரக துப்பாக்கியால் குருக்களை சுட்டுக்கொலை செய்தமை, வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்தமை குருக்களின் மகன்மார் இருவரையும் சுட்டு படுகாயப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களை புரிந்த இரு முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்க்கு எதிராகவும் சட்டமா அதிபரால் யாழ்.மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பானது யாழ். மேல்நீதிமன்றில் வழங்கப்பட்டது.

இதன்படி கொலைக்குற்றச்சாட்டு, கடும் காயத்தை விளைவித்தமை, கொள்ளையடித்தமை உட்பட 5 குற்றச்சாட்டுக்களிலும் குறித்த மூவரும் குற்றவாளிகள் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பளித்ததுடன் இம் மூவருக்கும் ஆயுள் தண்டனையும்  20 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் 30 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் கட்டத்தவறின் 18 மாத கடூழியச்சிறையும் 2 இலட்சம் ரூபா நஷ்ட ஈடும் கட்டத்தவறின் 2 வருட கடூழிச்சிறையும் அத்துடன் குறித்த மூவருக்கும் மரண தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 69

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*