யாழில் வெள்ளரிப்பழ விற்பனை

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வெப்பமான காலநிலை காரணமாக யாழில் வெள்ளரிப்பழ விற்பனை அமோகமாக இடம்பெற்று வருவதால் வர்த்தகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வெள்ளரிப்பழத்தின் விற்பனை அதிகரித்துள்ளதால் விற்பனையாளர்களும், வியாபாரிகளும் அதிக இலாபத்தை ஈட்டக் கூடியதாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது ஒரு வெள்ளரிப்பழம் 200 ரூபாவிலிருந்து 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ச்சியாக வெப்பமான காலநிலைக் நீடிப்பதனால் நெற்செய்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, கால்நடைகள் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

குளங்களின் நீர் மட்டமும் படிப்படியாக குறைந்து வருகின்றதுடன், இந்நிலை தொடர்ந்து நீடித்து வறட்சி தொடருமாயின் பாரிய குடிநீர் தட்டுப்பாட்டிற்கு மக்கள் முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 86

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*