தீவகப் பகுதியை அச்சுறுத்தும் மயிர்கொட்டி

தற்போது நிலவும் அதிகரித்த வெப்பம் ஒருபுறம் தீவக மக்களை வாட்டியெடுத்து வரும் நிலையில் அப்பிரதேசங்களில் மயிர்கொட்டிகளின் பெருக்கமும் அதிகரித்துள்ளமையால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.

தீவகப் பகுதிகளில் அதிகளவான காணிகளின் எல்லைகள் வேலியினால் தான் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேலிகளில் பூவரச மரங்கள் அதிகளவு காணப்படுகின்றன. பூவரச மரங்களை அதிகளவில் தமது இனப்பெருக்கத் தளமாக கொண்டு பரவும் மயிர்கொட்டிகள்  இம்முறை அதிகளவில் பெருகியுள்ளதனால் மக்களின் வாழிடங்களுக்குள்ளும் தென்னை, பனை மற்றும் பயன்தரு மரங்களையும் ஆக்கிரமித்துள்ளமையால் மக்களது உணவுக்கான பயிர்களும் பழ மரங்களும் அதிகளவில் தாக்கமுறுகின்றன.

அதுமட்டுமன்றி பாலர் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பாடசாலை மாணவர்களும் வயதான முதியவர்களும் அதிகளவில் மயிர் கொட்டியின் தாக்கத்திற்கு உள்ளாவதுடன் வீட்டு விலங்குகளும் இதன் தாக்கத்திற்கு முகங்கொடுத்து வருகின்றன.

மக்களது இயல்பு நிலையை அச்சுறுத்தும் குறித்த மயிர் கொட்டியை அழிப்பதற்கான திட்டம் எதுவும் இதுவரை சுகாதாரப் பகுதியினரால் செயற்படுத்தப்படாததுடன்  அதற்கான முயற்சிகளை கூட அவர்கள் இதுவரை மேற்கொள்ளவில்லை என்று மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

கடும் வெயிலின் தாக்கத்தால் மர நிழல்களில் தஞ்சமடையும் மக்களும் விலங்கினங்களும் மயிர் கொட்டியின் அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்படும் நிலையே உருவாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த மயிர் கொட்டியின் பரம்பல் அதிகரிப்புக்கு செண்பகம் என்ற பறவையினம் அழிவுற்று வருவதுதான் காரணம் என்றும் சொல்லப்படும் நிலையில் சுகாதாரப் பகுதியினர் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 240

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*