குடத்தணையில் வீடொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு.!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் குடத்தணையில் வீடொன்றிலிருந்து வெட்டுக்காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்தச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

58 வயதுடைய நல்ல தம்பி தேவகி என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் 76 வயதுடைய நல்லம்பி செல்லம்மா படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையினை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 25

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*