மட்டுவிலுக்கே உரித்தான முட்டிக் கத்திரிக்காய்

யாழ்ப்பாண குடாநாட்டில் உள்ள இந்துக்கள் அனைவரும் மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலயத்தின் ஏதாவது ஒரு பங்குனித் திங்களுக்காவது செல்வது வழமையாகும். மாட்டு வண்டில் பயணம், ஆலய தீர்த்தக் கேணியில் நீராடுதல், காவடி, தூக்குக்காவடி, பால்செம்பு, கற்பூரச்சட்டி, அடியழித்தல், அங்கப்பிரதட்சணம் மற்றும் ஏனைய நேர்த்திக்கடன் என அன்னையை நாடிவரும் பக்கர்கள் அனேகர். சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், சோறு அவியல், அவித்த மற்றும் பொரித்த மோதகம், வடை, கஞ்சி, கூழ், மோர், ஊறுகாய் தண்ணி என அன்னதானமும் நேர்த்திக்கடனும் பக்தர்களால் நிறைவேற்றப்படும். அத்துடன் மட்டுவிலுக்கே உரித்தான முட்டிக் கத்தரிக்காய்கள் படையலில் முக்கிய இடம் பிடிக்கும். 1990 களின் நடுப்பகுதி பகுதி வரை கிட்டத்தட்ட ஒரு கிலோ கிராம் எடை கொண்டதாக ஒரு முட்டிக் கத்தரிக்காய் விளையும். 1990 களின் நடுப்பகுதி பகுதியில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் காரணமாக அக்கத்தரிக்காய்களின் விதைகளை விவசாயிகளால் சேமிக்க முடியாமல் போனமை கவலைக்குரியது. ஆயினும் மட்டுவிலுக்கே உரித்தான முட்டிக் கத்திரிக்காய் தற்போதும் பயிரிடப்பட்டாலும், அவற்றின் அளவு சிறிதாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 194

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*