அமைச்சர் தொடர்பாக அவதூறான செய்தி வெளியிட்ட காவாலி போலிசில் மட்டியது

சிறுவர் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் தொடர்பாக அவதூறான செய்தி வெளியிட்ட காவாலி ஒருவன் மீது இணையத்தள குற்றவியல் விசாரணைக்குழுவினர் இன்று (11) விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து அவதூறு பரப்பி வந்த காவாலி ஒருவன் மீதே இணையத்தள குற்றவியல் விசாரணைக்குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையின் தொடர்ச்சியாக அவரது மடிக்கணனி மேலதிக விசாரணைகளிற்கென எடுத்துச்செல்லப்பட்டதுடன் அவரை நாளை யாழ்.காவல்நிலையத்தில் சமூகமளிக்க உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இணையத்தளம் ஒன்றில் இராஜாங்க அமைச்சர் தொடர்பாக அவதூறான செய்தி வெளியிடப்பட்டதாக, இராஜாங்க அமைச்சர் இணையளத்தள குற்றவியல் பொலிஸாருக்கு முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம், இன்று (11) யாழுக்கு வருகை தந்த இணையத்தள குற்றவியல் தொடர்பான விசாரணைக்குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 501

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*