சேன­நா­யக்க கட­வுள் போல இருந்து எமக்கு இந்த உத­வி­யைச் செய்­துள்­ளார்

வலி. வடக்­கில் நேற்று 683 ஏக்­கர் காணி­கள் விடு­விக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­கும் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக் கும் இரா­ணு­வத் தள­பதி மகேஸ் சேன­நா­யக்­க­வுக்­கும் நன்றி தெரி­வித்து அவர்­க­ளின் படங்­க­ளைத் தாங்­கி­ய­படி அலகு குத்தி காவடி எடுத்­தார் ஒரு­வர்.

மயி­லிட்­டி­யைச் சேர்ந்த மு. இன்­ப­ராசா என்­ப­வரே இவ்­வாறு காவடி எடுத்­தார். மயி­லிட்டி கண்­ணகை அம்­மன் ஆல­யத்­தில் இருந்து அவ­ரது குல­தெய்­வ­மான முலவை காளி கோயி­லுக்கு அவர் காவடி எடுத்­தார். அரச தலை­வர் மைத்­திரி, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, இரா­ணுவ தள­பதி மகேஷ் சேன­நா­யக்க ஆகி­யோ­ரு­டைய படங்­க­ளைக் கழுத்தில் மாட்­டிக்­கொண்டு அலகு குத்தி காவ­டி­யு­டன் அவர் நடந்து சென்­றமை பார்ப்­ப­தற்கு விநோ­த­மான காட்­சி­யாக இருந்­தது.

‘‘28 வரு­டங்­க­ளுக்­குப் பின் எமது சொந்த இடங்­க­ளுக்­குச் செல்­கி­றோம். ஒரு கனவு நன­வா­கி­யது போல உள்­ளது. முக்­கி­ய­மாக மகேஷ் சேன­நா­யக்க கட­வுள் போல இருந்து எமக்கு இந்த உத­வி­யைச் செய்­துள்­ளார். எனவே அனை­வ­ருக்­கும் நன்றி செலுத்­தும் வகை­யில் நான் இதனை ஒரு நேர்த்­தி­யாக மேற்கொள்­கின்­றேன்” என்­றார் இன்­ப­ராசா.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 119

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*