யாழ். தென்மராட்சிப்பிரதேசத்தில் நேற்று இரவு பதற்றம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள தென்மராட்சிப்பிரதேசத்தில் உள்ள சாவகச்சேரி பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தொடக்கம் பிரபல ரவுடிக்கும்பல் ஒன்ற தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மராட்சி பிரதேசத்தில் கிராம உத்தியோகத்தரின் வீடு உட்பட மூன்று வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று இரவு 11 மணியளவில் சாவகச்சேரி காவல் நிலையத்தில் இருந்து 1 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள மட்டுவில் வளர்மதி பகுதியில் வசிக்கும் உடுவில் பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தரின் வீட்டுக்குள் வாள் மற்றும் கோடரி போன்ற ஆயுதங்களுடன் நுழைந்த 6 பேர் கொண்ட கும்பலே இத்தாக்குதலை மேற்கொண்ட விட்டுத்தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

இத் தாக்குதல் தொடர்பாக நேற்று இரவு உடனடியாகவே கிராம உத்தியோகத்தரால் சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டும் இன்று மதியம் 12 மணி வரைக்கும் சம்பவ இடத்திற்கு காவற்துறையினர் வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

மேலும் இச்சம்மவத்தில்
கிராம உத்தியோகத்தரின் வீட்டுக் கேற்றினை கொடரியால் கொத்திப் பிரித்து வீட்டு வளாகத்திற்குள் நுழைந்தவர்கள் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்ததோடு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 உந்துருளிகளையும் அடித்து நொறுக்கிவிட்டு தப்பிச்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் அதிகாலை 5 மணியளவில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக கட்டுக்காணி ஒழுங்கையில் உள்ள வீட்டுக் கேற்றினையும் கொடரியால் பிரித்து உள்நுழைந்து வீட்டுக் கதவினையும் கொத்தி வீட்டுக்குள் நுழைந்து தொலைக்காட்சிப் பெட்டி உட்பட்ட பெறுமதியான வீட்டுத்தளபாடங்கையும் அடித்து நொறுக்கியதோடு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உந்துருளியையும் அடித்து நொறுக்கி விட்டுச் செல்லும் போது வீட்டின் மீது பெற்றோர் குண்டினையும் வீசிவிட்டுச் சென்றுள்ளதாக தெரிய வந்தள்ளது

இதனால் சமையலறையில் தீப்பிடித்துளளமை குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் அதிகாலை 5.30 மணிக்கு மீண்டும் மட்டுவில் வளர்மதி பகுதிக்குச் சென்ற அக்குழு கிராம உத்தியோகத்தரின் அயல் வீட்டுக்குள்ளும் நுழைந்து அதேபோன்றே சொத்துக்களை அடித்து நொறுக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த ரவுடிக்கும்பலின் தாக்குதல்களில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பத குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்

இம்மூன்று தாக்குதல் சம்பவங்களையும் ஒரு குழுவே மேற்கொண்டிருக்கின்றது என தெரிவிக்கும் சாவகச்சேரி காவற்துறையினர் சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை இன்று காலை கைதுசெய்ததுடன் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 264

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*