வெள்ளவத்தையில் அபார்ட்மெண்ட் விற்பனை மோசடியில் ஈடுபட்ட நபர்

கொழும்பு  வெள்ளவத்தைப் பகுதியில் யுனிவர்சல் கன்ஸ்ட்ருக்ஷன் எனும் பெயரில் வீடுகளை விற்பனை செய்து மோசடி செய்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர்  சுமார் 6 மில்லியன் ரூபாக்களை ஒருவரிடமும் 13 மில்லியன் ரூபாக்களை  இன்னோருவரிடமும் மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்  குறித்த நபருக்கு எதிராக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு தாக்கல் செய்த மோசடி வழக்கு இன்று கொழும்பு புதுக்கடை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப் பட்டது.

விளக்கமறியல்

இதன்போது  போது குற்றம் சாட்டப்பட்ட யுனிவர்சல் கன்ஸ்ட்ருக்ஷன் நிறுவன உரிமையாளர் திரு குமாரசாமி பரணன் என்பவரை  எதிர்வரும் மே  8ம் திகதி வரை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு இட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 221

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*