யாழ் சிறை ஊழியரை கொலை செய்ய எடுத்த முயற்சி தோல்வியாம்

யாழ். நக­ரில் நேற்­றி­ரவு சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­கள் மூவர் தாக்­கப்­பட்­ட­னர். அவர்­கள் பய­ணித்த சிறச்சாலை வாக­ன­மும் அடித்து நொறுக்­கப்­பட்­டது.

சிறை அலு­வ­லர்­க­ளைத் தாக்­கி­னார் என்று சந்­தே­கிக்­கப்­ப­டும் ஒரு­வர் சம்­பவ இடத்­தில் இருந்து பொலி­ஸா­ரால் அழைத்­துச் செல்­லப்­பட்­டார்.

சம்­ப­வம் யாழப்­பா­ணம் சத்­தி­ரச் சந்­திக்கு அண்­மித்த பகு­தி­யில் இரவு 8 மணி­ய­ள­வில் இடம்­பெற்­றது.

யாழ்ப்­பா­ணச் சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­கள் மூவரே தாக்­கப்­பட்­ட­னர்.

அவர்­கள் பய­ணித்­தது என்று கூறப்­ப­டும் வாக­னத்­தின் முன்­பக்­கக் கண்­ணாடி அடித்­துச் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளது.

அந்­தப் பகு­தி­யில் உள்ள மது­பான நிலை­யத்­தில் இருந்தே சிலர் சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­க­ளைத் தாக்­கித் துரத்­திக் கொண்டு வந்­த­னர் என்று நேரில் பார்த்­த­வர்­கள் கூறி­னர்.

உத்­தி­யோ­கத்­தர்­கள் அவர்­க­ளு­டைய வாக­னங்­க­ளுக்­குள் ஏறி­ய போது வாக­னம் அடித்துச் சேத­மாக்­கப்­பட்­டது.

சம்­ப­வத்தை அடுத்து பொலி­ஸார், சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­கள், சிறப்பு அதி­ர­டிப்­ப­டை­யி­னர் அந்த இடத்­ துக்கு வர­வ­ழைக்கப்­பட்­ட­னர்.

தாக்­கு­தல் நடத்­தி­ய­வர்­கள் தப்­பி­னர் என்று சம்­ப­வத்தை நேரில் கண்ட சிலர் கூறி­னர்.

பொலி­ஸார், படை­யி­னர், சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­கள், சிஐ­டி­யி­னர் எனப் பலர் அங்கு குழு­மி­யி­ருந்­த­னர்.

சிறிது நேரத்­தில் அங்­கி­ருந்த ஒரு­வர் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­டார்.

அவர் வாக­னத்­தில் ஏற்­றிச் செல்­லப்­பட்­டார்.

“உணவு வாங்­கு­வதற்­கா­கச் சென்ற சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­களை மது­பான நிலை­யத்­தில் இருந்து வந்­த­வர்­கள் அடித்­துள்­ள­னர். சம்­ப­வத்­தில் உத்­தி­யோ­கத்­தர்­கள் காய­ம­டைந்து யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

அவர்­கள் பய­ணித்துத் தாக்­கப்­பட்ட வாக­ன­மும் பொலிஸ் நிலை­யத்­துக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளது. சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய 36 வய­து­டைய ஒரு­வர் கைது செய்­யப்­ப­பட்­டுள்­ளார்’’ என்று பொலிஸ் தரப்­பி­னர் தெரி­வித்­த­னர்.

எனி­னும் தெல்­லிப்­ப­ழைக்­குச் சென்ற சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­களே இடை­யில் மறித்­துத் தாக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று சிறைச்­சா­லைத் தரப்­பி­னர் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

இந்த தாக்குதலுக்குரிய பொறுப்பை கிளிநொச்சி நீதவான் எடுக்கவேண்டும்.

கிளிநொச்சி நீதவான் சிறைச்சாலைக்குள் கஞ்சாவிற்பவர்களையும் , சிறைச்சாலைக்குள் வைத்து தொலைபேசி பாவிப்பவர்களையும் , சிறைச்சாலைக்குள் வைத்து போதை வியாபாரம் செய்பவர்களையும் சிறைச்சாலை ஊழியர்கள் கைது செய்து அவர்களை சீர்திருத்தகூடாது என்று சிறைச்சாலை ஊழியருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதனால் சிறைச்சாலை ஊழியரின் பாதுகாப்பு கப்பல் ஏறி சிறையில் இருக்கும் காவாலிகள் சிறைச்சாலைக்குள் அனைத்து வியாபாரத்தையும் அரங்கேற்றி வருகின்றனர்.

இவற்றை தடுக்க முற்படும் தமிழ் சிறைச்சாலை ஊழியர்களை தாம் வெளியே வந்து வீதியில் வைத்து கவனிப்பம் என்று மிரட்டி வருகின்றமை குறிப்பிடதக்கது.

இதேநேரம் உலக நாடுகளில் சிறைச்சாலையில் அடைக்கபடும் கைதிகள் காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை சிறைச்சாலைக்கு வெளியே பேட்டைகளில் வேலைக்கு விடபட்டு சிறைச்சாலைகளில் இரவு நேரத்தில் மட்டும் அடைக்கபட்டு வருகின்றநிலையில் இலங்கையில் மட்டும் கைதிகள் அடைக்கபட்டு தினமும் 7 தடவை திரும்ப திரும்ப எண்ணப்பட்டு இலவச உணவு போட்டு ஒண்டுக்கும் பயனற்ற ஒரு மந்தை கூட்டமாக சிறைகைதிகள் வைய்திருக்கடுகின்றனர்.

இதனால் பல கோடி நட்டம் இலங்கை அரசு விரயம் செய்து வருகிறது.

சிறைக்கைதிகளை வைத்து அரச தேசிய வருமானத்தை அதிகரிக்கும் வேலைகளுக்கு பயன்படுத்துவதே உலக நாடுகளில் தற்போது இருந்து வரும் நடைமுறையாகும்.

இலங்கையில் மட்டும் “ஒரு ரூபாய்க்கு பெறுமதி இல்லாத பல ஆயிரம் கைதிகளில் ஒரு கைதியை ஒரு இரவு பாதுகாக்க இலங்கை அரசு 3 இலட்சம் ரூபாவை செலவு செய்து வருகிறது”.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 200

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*