யாழில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குடும்பத் தலைவர்!

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மூன்று பிள்­ளை­க­ளின் தந்­தை­யான குடும்­பத் தலை­வர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்­கே­சன்­துறை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­யில், பேத்தியாருடன் வசித்து வந்த பதின்ம வய­துச் சிறு­மியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குறித்த நபர் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறு­மி­யின் தாயார் ஏற்­க­னவே உயி­ரி­ழந்­து­விட்­டார். அவ­ரது தந்தை நோயுற்­றுள்­ளார். சிறுமி பேத்­தி­யா­ரு­டன் வசித்து வந்­துள்­ளார்.

இந்த நிலை­யில் சிறுமி நோய்­வாய்ப்­பட்ட நிலை­யில் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சிகிச்­சைக்­கா­க அனுமதிக்கப்பட்டிருந்த போதே சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.

சிறுமி வழங்­கிய வாக்­கு­மூ­லத்­தின் அடிப்­ப­டை­யில், சிறு­மி­யின் வீட்­டில் இருந்து சற்­றுத் தொலை­வில் உள்ள சந்­தேக நபர் பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.
Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 72

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*