பொலிஸாரால் விழிப்புணர்வுப் பிரசுரங்கள் விநியோகம்

வாகனப் போக்குவரத்து தண்டப் பணம் செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்கள் சாவகச்சேரி நகர்ப்பகுதியில் இன்று வழங்கப்பட்டன.

சாவகச்சேரி அஞ்சல் அலுவலகத்தினரும், பொலிஸாரும் இணைந்து வாகனச் சாரதிகளுக்கும் பொது மக்களுக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.

சாவகச்சேரி பேருந்து நிலையம் முன்பாக வைத்து அஞ்சலதிபர் லம்பெர்ட் இன்பராஜ் தலைமையிலான அலுவலர்களும் சாவகச்சேரி பொலிஸ் நிலைய தலைமைப்பீட பொறுப்பதிகாரி டபிள்யு.எம்.எஸ்.பி.விக்கிரமசிங்க நிலையப் பொறுப்பதிகாரி சம்பத் பெரேரா தலைமையிலான பொலிஸாரும் விநியோகித்தனர்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 141

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*