பருத்­தித்­து­றை­யில் வீடு புகுந்து 6 பேருக்கு வாள் வெட்டு!!

பருத்­தித்­துறை, கற்­கோ­வ­ளத்­தில் நேற்­று­முன்­தி­னம் நடந்த வாள்­வெட்­டில் 6 பேர் காய­ம­டைந்­துள்­ள­னர். பருத்­தித்­து­றைப் பகு­தி­யில் கடந்த ஒரு மாதத்­தில் மூன்று வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் இடம்­பெற்­றுள்­ளன.

இது தொடர் பில் பொலி­ஸார் எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வே­யில்லை என்று மக்­கள் குற்­றஞ்­சாட்­டி­யி­ருந்த நிலை­யி­லேயே நான்­கா­வது சம்­ப­வ­மாக இது நடந்­துள்­ளது. பருத்­தித்­துறை, சுப்­பர்­ம­டம், தும்­பளை ஆகிய இடங்­க­ளில் கடந்த ஏப்­ரல் மாதம் அடுத்­த­டுத்து வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யி­ருந்­தன.

இந்­தச் சம்­ப­வங்­கள் தொடர்­பில் பொலி­ஸா­ரு­டைய அணு­கு­மு­றை­யில் சந்­தே­கம் எற்­ப­டு­கி­றது குற்­ற­வா­ளி­க­ளைக் கைது செய்­வ­தி­லும், அவர்­க­ளுக்கு தண்­டனை பெற்­றுக் கொடுப்­ப­தி­லும் பொலி­ஸார் அச­மந்­த­மா­கவே உள்­ள­னர்.

வாள்­வெட்­டுக் கும்­ப­லைச் சேர்­ந­த­வர்­கள் வாள்­க­ளு­டன் உல்­லா­ச­மாக நட­மா­டு­கி­றார்­கள். அவர்­களை எதிர்த்­தால் துரத்­தித் துரத்தி வாளை வீசு­கி­றார்­கள். இந்­தச் சம்­ப­வங்­கள் பொலி­ஸா­ருக்கு ஏற்­க­னவே தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டது. எனி­னும் அவர்­கள் இது தொடர்­பில் எந்த நட­வ­டிக்­கை­யும் எடுப்­ப­தில்லை என்று பிர­தேச மக்­கள் கூறு­கின்­ற­னர்.

நேற்று முன்­தி­ன­மும் மாலை கற்­கோ­வ­ளத்­தில் 7 பேர் கொண்ட கும்­பல் ஒன்று வாள்­க­ளு­டன் வீடு புகுந்து தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ளது. அதில் 6 பேர் காய­ம­டைந்த நிலை­யில் மந்­திகை மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

அதே­வேளை, பருத்­தித்­துறை அல்­வாய்ப்­ப­கு­தி­யில் வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் இடம்­பெ­று­கின்­றன என்று தெரி­வித்து அந்­தப் பகு­தி­யில் உள்ள மக்­கள் சிலர் ஆல­யம் ஒன்­றில் தஞ்­ச­ம­டைந்­தி­ருந்த சம்­ப­வ­மும் கடந்த ஆண்டு நடந்­தது என்­றும் மக்­கள் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 158

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*