சாதிப்புத்தியை காட்டிய சாந்தி எம்.பி

சாதிப்புத்தியை காட்டிய சாந்தி எம்.பி. கடந்த காலங்களில் பிரதேச செயலகத்தில் ADP வேலை செய்த போது பயனாளிகளுக்கென ஒதுக்கப்பட்ட பொருள்களில் முதலாவது தனக்கு தேவையானவற்றை எடுத்து வைத்துவிட்டுத் தான் மிகுதியை பயாளிகளுக்கு வழங்குகின்ற முறையை வழக்கமாக கொண்டிருந்தவ திருமதி சாந்தி என இவர் பணியாற்றிய பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக பணியாற்றியவரே என்னிடம் நேரடியாக கூறியிருந்தார்.

ஆளுமையில்லாத எமது மக்களின் வேதனைகளை, வலிகளை ஜீரணிக்காத, நடிகர்களை போல எமது மறவர்களின் நினைவு தினங்களில் அழுது சோபனை செய்யும் அபத்தர்களை நாம் என்ன செய்வது.

சிங்களதேச அரசியலுக்குள் அகப்பட்டு சுமந்திரன் அவர்களினால் சின்னாபின்னமாக்கப்பட்டுவிட்ட இரா சம்பந்தனின் சாணக்கியம் என்று கூறப்பட்ட அரசியல் திருவிளையாடலில் கண்டுபிடிக்கப்பட்டு ஏமாந்து கொண்டிருக்கும் தமிழர் தேசத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட “முகம்” தான் இந்தப் பாராளுமன்ற உறுப்பினராக பவனி வரும் திருமதி சாந்தி அவர்கள்.

திருமதி ஸ்ரீஸ்காந்தராசா சாந்தி அவர்களின் தேர்தல் வெற்றிக்காக புலம்பெயர் தேசத்தில் இருந்து அனுப்பப்பட்ட பல லட்ச ரூபாய்களை காவு கொண்ட தமிழரசின் வன்னித் தலைவரான மருத்துவரும் சாதாரண ஆள் இல்லையாமப்பா பிரதேச வாதத்தை அப்பாவி இளைஞர்களின் மனதில் ஊட்டி அதில் தனது அதிகாரத்தை தக்க வைக்க முயலுகின்றதாம் இந்தப் பச்சோந்தி அப்பாவி மக்களின் பணத்தை காவு கொள்கின்ற களவு கண்டுபிடிக்கப்பட்டு முதலமைச்சர் விக்னேசுவரனினால் கலைத்து விடப்பட்ட கடந்த கால சுகாதார அமைச்சர் அவர் வவுனியாவில் மக்களின் முகம் பார்ப்பதற்கு கூட பயப்பட்டு முகத்தை திருப்பி வைத்துக்கொண்டு தான் வாழ்க்கை நடக்குதாம். வடமாகாணத்தில் அமைச்சராக இருந்தவர்கள், இருப்பவர்கள் அனைவரும் நல்லவர்கள் தானாம் சிவனின் பெயரைக்கொண்ட இளவயதில் மக்களில் நேசம் கொண்டு மாணிக்கத்தின் கண் பார்வையிலிருந்தும் தப்பி உயிர் வாழும் தனயனைத் தவிர….

கிழக்கு மாகாணத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்த்தேசியத்தைப் பயன்படுத்தி மூன்று மொழியும் தெரியும் எனக் கூறி என்னையும் ஏமாற்றி பாராளுமன்றம் சென்ற ரியூசன் வாத்தி மூன்றாம் மாடியில் நீச்சல் தடாகம் கட்டுதாம் உண்மையோ கனடா நாடு எல்லாருக்கும் கை கொடுக்குதாம் வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள் …
தத்தமது வாழ்க்கைகளை தொலைத்துவிட்டு சிறைக்குள் Life அச்சுத் தான் வரும் என எதிர்பார்ப்போடு இருக்கின்ற பலரது குடும்பங்கள் படுகின்ற துன்பங்கள் ஏதோ இந்தக் கனடா காரர்களின் கண்களுக்கு கூட தெரியாமல் போனதை நினைக்கத் தான் ரெம்பக் கவலையாக இருக்குதப்பா .. நடக்கட்டும்.. நாடக்கட்டும்.. ஒருநாள்… வராமலா போய்விடும்? அப்ப பார்ப்போம்… அதுவரை….. அமைதியாக.. பொறுத்திருப்போம்..

முல்லைத்தீவு மாவட்டத்தின் காணிகள் சிங்களவர்களாலும், முஸ்லிம்களாலும் அபகரிக்கப்பட்டுவரும் நிலையில், அந்த நிலத்தின் பாரம்பரிய குடிகளான தமிழர்களில் பலர் இன்றும் குடியிருக்க சொந்த நிலமில்லாமல் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இந்தநிலையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் காணி கோரி விண்ணப்பம் செய்யப்பட்ட விபரங்களை தமிழ் பக்கம் ஆராய்ந்தது. அப்பொழுது அதிர்ச்சியளிக்கும் பல விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது,

செல்வாக்குள்ள தரப்புக்கள் நிலங்களை கையகப்படுத்த முயற்சிப்பது ஆதாரத்துடன் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி சாந்தி சிறிஸ்கந்தராசாவும் ஒருவர் என்பதே அதிர்ச்சியளிக்கும் விடயம்!

முல்லைத்தீவு மாவட்ட எம்.பியாக நியமனம் பெற்றதும் சாந்தி சிறிஸ்கந்தராசா செய்த வேலை- தனது மகனான கபிஸ் என்பவரின் பெயரில் பண்ணை ஆரம்பிக்க பத்து ஏக்கர் நிலம் வழங்குமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் விண்ணப்பித்தார். அத்துடன், அரச அதிபரை தொடர்பு கொண்டு- காணியை தனக்கு ஒதுக்கி தருமாறும் கேட்டுள்ளார்.

அவர் அடையாளப்படுத்தியுள்ள காணி, துணுக்காய் கரும்புள்ளியானில் பாலியாற்றங்கரையில் அமைந்துள்ளது. அவரது மகன் சிறிஸ்கந்தராசா கபிஸ் பெயரில் அந்த பத்து ஏக்கர் காணியை முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் கோரியுள்ளார்.

இதுதவிர, முல்லைத்தீவு மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு படையென்ற இராணுவ நிர்வாகத்திற்காக பண்ணை அமைக்க கோரப்பட்டுள்ள காணியின் மொத்த அளவு 527.25 ஏக்கர். உயர்பாதுகாப்பு வலயம், படையினரால் சுவீகரிக்க திட்டமிடப்பட்டுள்ள காணிகளிற்குள் அடங்காது.

அத்துடன், குருணாகலை சேர்ந்த அஜந்த பெரேரா என்ற சிங்களவரும் பண்ணை அமைக்க முல்லைத்தீவில் காணி கோரியிருக்கிறார்.

இந்த விடயங்கள் ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, யாருக்கும் நிலம் வழங்குவதில்லையென எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், இவர்கள் யாருக்கும் நிலம் வழங்கப்படவில்லை.

மாவட்ட செயலகத்தில் விண்ணப்பித்து நிலத்தை பெறுவது சட்டவழிமுறைதான். ஆனால் அவரது எம்.பி பதவிகாலத்தில் இந்த நிலத்தை பெற முனைந்தது, அவரது எம்.பி பதவி சலுகையினால் நிலம் கிடைக்கலாமென்ற எதிர்பார்ப்பில் அமைந்திருக்கலாம். மக்கள் நிலமின்றி தவித்து வரும் நிலையில், அந்த மக்களின் பிரதிநிதிகள் இப்படி செய்வது அரசியல் அறமா என்பதே இப்போதைய கேள்வி.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 342

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*