வடமராட்சி தும்பளை இளைஞர் இந்தியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழப்பு

இந்தியா தமிழ் நாட்டில் இன்று 30-04-2018 திங்கட்கிழமை காலை இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர் . இச் சம்பவத்தில் பருத்தித்துறை தும்பளை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளார் .

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவது புலம் பெயர் நாட்டில் இருந்து வந்த உறவினர்களை பார்ப்பதற்கு குறித்த இளைஞரும் .தாயாரும் இந்தியா சென்றதாகவும் இன்று காலை 10-00 மணியளவில் உறவினர்களுடன் தமது தேவை நிமிர்த்தம் வெளியில் சென்ற வேளை அதிவேகமாக வாகனம் வீதியை விட்டு மின்கம்பத்துடன் மோதியுள்ளது

இவ் கோர விபத்தில் இருவர் சம்பவிடத்தில் உயிரிழந்ததுடன் வாகனத்தில் பயணம் செய்த தாயார் ஆபத்தான நிலையிலும் ஏனைய அனைவரும் படுகாயம் அடைந்து வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது .

இச் சம்பவத்தில் பருத்தித்துறை தும்பளையைச் சேர்ந்த லொகேஸ்வரன் கார்த்தீபன் [வயது 32] என்ற என்பவர் உயிரிழந்தார் . இவருக்கு இன்னும் சில மாதங்களில் திருமணம் இடம்பெறவுள்ள நிலையில் இவ்துயரச்சம்பவம் இடம் பெற்றுள்ளது இவ் விபத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த வாகன சாரதியும் உயிரிழத்துள்ளார்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 304

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*