ஆசிரியை பரிதாப பலி: யாழ்ப்பாணத்தில் பதற்றம்!

அதிபர் ஒருவரின் அத்துமீறிய செயற்பாடு காரணமாக அப்பாவி அசிரியை ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடந்தேறியுள்ளது. இதன் காரணமாக குறித்த அதிபர் தண்டிக்கப்பட வேண்டும் என எதிர்பலைகள் அதிகரித்து வருவதால் யாழ்ப்பாணத்தின் கல்விப்புலம் சார்ந்தோர் மத்தியில் அமைதியின்மை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதது.

இது தொடர்பில் தெரியவரவதாவது –

தமிழ்ப்பாடத்தில் திறமையுள்ள ஆசிரியர் ஒருவர் தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார். அதற்கு பாடசாலை ஒன்றின் அதிபரின் நெருக்கீடுகளே காரணம் என்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

எனினும் இறப்புக்கான உரிய காரணம் தெரிவிக்கப்படவில்லை. யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த கவிதா ஜெயசீலன் (வயது 40) என்பவரே நேற்றுமுன்தினம் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் புறநகர்ப்பகுதியில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் நீண்ட காலம் குறித்த ஆசிரியர் கடமையாற்றிருந்தார். சில வாரங்களுக்கு முன்னர் இடமாற்றம் பெற்றுச் சென்றிருந்தார். எனினும் அவர் முன்னர் கடமையாற்றிய பாடசாலை அதிபர், குறித்த ஆசிரியருக்கு நெருக்கீடுகள் கொடுத்துள்ளார் என்று அதிபருக்கு எதிராகச் சங்கம் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அதனால் தான் குறித்த ஆசிரியர் தவறான முடிவு எடுத்தார் என்றும் சங்கம் குற்றஞ்சாட்டுகிறது.

இடமாற்றம் பெற்றுச் சென்ற அந்த ஆசிரியரை குறித்த அதிபர் தனது பாடசாலைக்கு மாலை வேளை வந்து கற்பிக்க வேண்டும் என்று நெருக்கீடுகள் கொடுத்ததோடு சம்பள ஏற்றப் படிவத்தை வழங்காது தடுத்து நிறுத்தியுள்ளார். இது தொடர்பில் ஆசிரியை வலயக் கல்வித் திணைக்களத்தில் முறையிட்டும் எந்தப் பயனும் இருக்கவில்லை. மாறாகப் பணிப்பாளரால் எச்சரிக்கப்பட்டார்.

ஏற்கனவே இந்தப் பாடசாலையில் கடமையாற்றிய மற்றொரு ஆசிரியை குறித்த பாடசாலை அதிபரால் பாதிக்கப்பட்டு வேறு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றார். அதிபர் இனரீதியான பாகுபாட்டைக் கொண்டிருக்கிறார் என்றே அறியப்படுகின்றது. எனவே இவை குறித்து மாகாணக் கல்வித் திணைக்களம் நடத்துகின்ற போலியான விசாரணைகளை நிறுத்தி மாகாணக் கல்வி அமைச்சு நேரடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று சங்கத்தின் குற்றச்சாட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு குறித்த செய்திக் குறிப்பு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் குறித்த குற்றச்சாட்டுகளை குற்றஞ்சாட்டப்படும் பாடசாலை அதிபர் மறுக்கிறார். குறித்த ஆசிரியை இடமாற்றம் பெற்றபோதும் பிற்பகலில் மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதாகத் தானாகவே கூறினார். அவருக்கு சம்பள ஏற்றப்படிவத்தை தான் கடமையிலிருந்து காலத்துக்குரியதை வழங்க முடியும். அதற்கு முதல் இருந்த அதிபர் தற்போது பாடசாலையில் இல்லை. அதனை வழங்க முடியாது. என்று கருதுகிறேன். இது குறித்து கோட்டக் கல்விப் பணிப்பாளருடன் பேசியிருக்கிறேன் என்று குறித்த பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.

யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர்களுள் ஒருவரான் மாணிக்கராசாவிடம் இது தொடர்பில் கேட்டபோது குறித்த ஆசிரியருக்கு தொந்தரவு இருந்திருக்கிறது.

அது வழமையாக எல்லாப் பாடசாலைகளிலும் உள்ள விடயம் தானே. அதிபர்கள் ஆசிரியர்களைப் பேசுவது வழமை தானே. ஆனால் உயிரிழப்புக்கு அதுதான் காரணம் என்றும் கூறமுடியாது. ஆசிரியைக்கு நோய் இருந்ததாகக் கூறப்படுகின்றது. அது காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.

குறித்த ஆசிரியை தமிழ்ப் பாடத்தில் மிகச்சிறந்த உத்வேகமுடையவர். செயலுருவாக்கத் திறனுடையவர் என்று சக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

முன்னர் குறித்த ஆசிரியருக்கு மன அழுத்தம் இருந்துள்ளதால் தன்னை வருத்தியிருந்தார். கடந்த 3 வருடங்களாக அவ்வாறான எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆரோக்கியமாகவே இருந்தார். திடீரென ஏன் தவறான முடிவு எடுத்தார் என்று தெரியவில்லை என்று இறப்பு விசாரணையில் கூறப்பட்டது.

இது பற்றி முறைப்பாடு அல்லது தகவல்கள் எதுவும் தமக்குக் கிடைக்கவில்லை. முறைப்பாடு வந்தால் அது பற்றிக் கவனஞ் செலுத்தப்படும் என்று வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 1328

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*