கயிறு மட்டும் கிடந்தது

2018-05-12 காலை 07:30 சனிக்கிழமை காலை நாரந்தனை வடக்கு சுடலையடி பற்றைக் காட்டுப்பகுதியில் வெள்ளை நிற பசு நாகு ஒன்று ஒளித்துக் கட்டப்பட்டிருந்தது.

மீன் வாங்க கடற்கரைக்குச் சென்றயான் இதை அவதானித்துவிட்டு உடனடியாக நாரந்தனை வடக்கு விவசாய சம்மேளனத் தலைவர் திரு.சி.தனபாலன்.

அவர்களுக்கு அறிவித்துவிட்டு , எனது மைத்துனர் திரு.சி.தில்லைநாதனுடன் சென்று மாட்டைப் பார்த்தால் காணவில்லை.

கயிறு மட்டும் கிடந்தது .

15 நிமிட இடைவெளியில் மாடு இறைச்சியாக்கிக் கொண்டு போகப்பட்டுவிட்டது.

இந்தக் கதைதொடராமல் முடிவு கட்டப்படவேண்டியது அவசியம் .

சுடலையடியில் பல எலும்புக்கூடுகள் காணப்படுகின்றன. பதிவேற்றியுள்ளேன்.

ஊரில் உள்ள சமூக அக்கறையாளர்கள் சேர்ந்து விழிப்புக்குழுக்களை அமைத்துக் கண்காணிக்க வேண்டும்.இதற்கு எனது பங்களிப்பை வளங்கத் தயாராக உள்ளேன்
ஊர்காவற்றுறைப் பிரதேச செயலகம், பிரதேசபை என்பன பற்றைக்காடுகளை அழிக்கத் தமது பங்களிப்பை வழங்கவேண்டும்.

கால் நடைவளர்ப்பாளர்களே விழிப்பாக இருங்கள் ! நமது கறவைப் பசுக்கள் மோசமாக திருட்டுக் கும்பல்களால் அழிக்கப்படப்போகின்றன!

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 274

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*