தெல்லிப்பளை பாடசாலை மகிந்தோதய ஆய்வு கூடத்தில் மாணவிகள் துஸ்பிரயோகம்

யா/தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மாணவிகளை மாலை நேர விசேட வகுப்பில் வைத்து கணித பாட ஆசிரியர் பல மாதங்களாக துஸ்பிரயோகம் செய்து வந்தமை யாழ் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆங்கில மொழி மூல மாணவிகள் பலரும் கணித பாட ஆசிரியரின் துஸ்பிரயோகத்துக்கு தொடர்ச்சியாக இலக்காகி வந்தமை பாடசாலை உளவியல் பெண் ஆசிரியரின் முயற்சியால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

உளவியல் ஆசிரியர் சம்பவத்தை அதிபருக்கு கடந்த ஒரு கிழமைக்கு முன்னர் தெரியப்படுத்திய போதும் , சம்பவத்தை அதிபர் மூடி மறைத்து துஸ்பிரயோகம் செய்த கணித பாட ஆசிரியரை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தரம் 6 , 7 க்கு வகுப்பு எடுக்க தடை போட்டுள்ளார்.

மாலை நேர வகுப்புக்கு பொறுப்பான ஒரு பெற்றோர் ஊடாக அதிபர் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகளின் பெற்றோரை சமரசப்படுத்த முயன்றுள்ளார்.

சமரச முயற்சியாக நாளை புதன்கிழமை (23/05/2018) பாடசாலையில் மாலை 1.30 க்கு ஆங்கில மொழி மூல மாணவிகளின் பெற்றோருக்கு அதிபர் தலைமையில் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

மாலை நேர வகுப்பு மகிந்தோதய ஆய்வு கூடத்தில் நடைபெறுவது வழமை என்றும், குறித்த வகுப்பில் மாணவி ஒருவரை எழுப்பி நீர் குழப்படி எனவே தண்டனையாக அருகில் உள்ள வெளிச்சம் குறைந்த அறைக்கு சென்று நிக்குமாறு கூறி பின்னர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இவ்வாறு தினமும் வெவ்வேறு மாணவிகளை துஸ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.

குறித்த ஆசிரியர் தனது தூஸ்பிரயோகத்தை மறைக்க கடுமையான தண்டனை வழங்கி வருபவர். வெளியே சொன்னால் அடிப்பேன் என 11 ,12 வயது மாணவிகளை அச்சுறுத்தி வந்துள்ளார்.

குறித்த கணித ஆசிரியர் 40 வயதை கடந்தும் திருமணமாகாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி பாடசாலைகளை கவனிக்க தெல்லிப்பளை பிரதேச செயலக சிறுவர் பெண்கள் உத்தியோகத்தர்களை விசேட உத்தரவில் நியமித்துள்ள போதும் சம்பவம் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

நாளை தெல்லிப்பளை யூனியன் கல்லூரி பெற்றோர்கள் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தயாராகி வருவதாக அறியமுடிகின்றது.

மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் கல்லூரியின் பழைய மாணவர்  என்பது குறிப்பிடத்தக்கது

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 16885

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*