சிறுவர் பாலியல் துஸ்பிரயகத்தில் தெல்லிப்பளை யூனியன் ஆசிரியர் கைது

யா /தெல்லிப்பளை யூனியன் கல்லூரி கணித மற்றும் பிரபல பெளதீகவியல் ஆசிரியர் சத்தியநாரயணன் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை தெல்லிப்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 என்ற சிறுவர் பாதுகாப்பு தொலைபேசி இலக்கம் ஊடாக முறைப்பாடு செய்தனர். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் விசேட பொலிஸ் பிரிவு தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாட்டை கையளித்தை தொடர்ந்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

தெல்லிப்பளை பொலிஸார் அதிபரிடம் விசாரணைக்காக பாதிக்கப்பட்ட மாலை நேர விசேட வகுப்பில் குறித்த ஆசிரியரிடம் கல்வி கற்ற மாணவிகளை அனுப்பி வைக்குமாறு கூறினர்.

அதிபர் சம்பவத்தை மூடி மறைக்கும் நோக்கில் நன்கு திட்டமிட்டு பாதிப்பு குறைந்த 3 மாணவிகளை மட்டும் புதன்கிழமை காலை விசாரணைக்கு பொலிஸ் நிலையம் அனுப்பி வைத்துள்ளார். இதனை அறிந்த பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் 1.15 மணியளவில் பாடசாலை சென்று ஆர்ப்பாட்டம் செய்த பின் தாமாக முன்வந்து மாலையில் பொலிஸ் நிலையம் சென்று ஆசிரியருக்கு எதிராக முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

இன்று வியாழக்கிழமை சிறுவர் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட ஆங்கில மொழி மூல கணித பாட ஆசிரியர் சத்திய நாரயாணன் சட்ட மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆசிரியரிடம் கல்வி கற்கும் அனைத்து மாணவிகளிடமும், முன்னர் கல்வி கற்பித்த மகாஜனா போன்ற பாடசாலை மாணவிகளிடமும் மேலதிக வாக்குமூலங்களை பெற வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சம்பவத்தை ஏற்கனவே அறிந்தும் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் அறிவிக்காது துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட ஆசிரியரை காப்பாற்றி தனது பாடசாலை மானத்தை காப்பாற்ற கடும் முயற்சி செய்த அதிபரை இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு தெல்லிப்பளை பொலிஸார் அழைத்துள்ளனர்.

துஸ்பிரயோகத்தை மூடி மறைக்க முற்பட்ட பாரிய குற்றத்திற்காக அதிபரும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் பாடசாலை தவிர்ந்த விசேட வகுப்பில் நடைபெறும் குற்றங்களுக்கு அதிபரும் பாத்திரவாளி என வட மாகாண முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த ஆசிரியர் 3 மாதங்களுக்கு முன்னர் ஒரு மாணவியுடன் பிரச்சனைப்பட்ட போது சம்பவத்தை நீதிமன்று மற்றும் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு செல்லாது சமாளித்த தெல்லிப்பளை பிரதேச செயலக அரச அதிகாரிகள் தொடர்பாக மல்லாகம் நீதிமன்ற நீதிபதி விசேட விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 1207

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*