ஏழை மாணவிகளுக்கு நீதி கிடைக்குமா வலி வடக்கில்

தெல்லிப்பளை யூனியன் கல்லூரி ஆசிரியர் செல்வரத்தினம் சத்தியநாராயணன் மாணவிகளை மாலை நேர பிரத்தியேக வகுப்பில் வைத்து பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்ததாக பெற்றோர் மாணவிகள் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் தெல்லிப்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தால் வருகின்ற 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கில் ஆசிரியரை தப்ப வைப்பதற்காக பல வழிகளில் முயற்சிகள் இடம்பெற்று வருவதும், பாதிக்கப்பட்ட ஏழை மாணவிகளுக்கு முறைப்பாட்டை மீள பெற அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதையும் எமது புலனாய்வு செய்தியாளர் வெளிப்படுத்தி உள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவிகளுக்காக குரல் கொடுக்க இது வரை தொடர்புபட்ட அரச அதிகாரிகளோ அரச சார்பற்ற நிறுவனங்களோ சட்ட நிறுவன சட்டத்தரணிகளோ முன் வராமை அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

இதற்கு பல காரணிகள் பின்புலமாக உள்ளதை அறியமுடிகின்றது.

குறித்த ஆசிரியரின் பாலியல் சேட்டைகளை இவ் வருட ஆரம்பத்தில் 3 மாதங்களுக்கு முன்னர் கேள்வியுற்ற தெல்லிப்பளை பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் பாடசாலையில் விழிப்புணர்வு செய்து மாணவிகளிடம் பின்னூட்டலை பெற்ற போதே உறுதிப்படுத்தி உள்ளர்.

இது தொடர்பாக  3 மாதங்களுக்கு முன்னர் பிரதேச  செயலருக்கு அறிவித்த போது பாலியல் குற்றம் என தெரிந்திருந்தும் பொலிஸாருக்கு அறிவிக்க அனுமதிக்கவில்லை என தொடர்புடைய உத்தியோகத்தர்கள் தற்போது தெரிவிக்கின்றனர்.

இதற்கான காரணம் சந்தேக நபரான ஆசிரியரின் சகோதரன் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இடர் தொடர்பான அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி வருவது மற்றும் அப்போதைய உதவி பிரதேச செயலர் யூனியன் கல்லூரி பழைய மாணவனும் என்பதால் ஆகும்.

இதனால் தற்போது பெற்றோர் மாணவிகள் முன்வந்து தாமாக பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு கொடுத்துள்ள போதும் தெல்லிப்பளை பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் எவரும் பாடசாலை சென்று மேலதிக விசாரணை செய்யவோ பாதிக்கப்பட்ட பிள்ளைகள் மற்றும் பெற்றோருக்கு ஆறுதல் கூறவோ இல்லை.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை 1929 சிறுவர் தொலைபேசி ஊடாக கிடைத்த முறைப்பாடு என்பதால் 23/05/2018 புதன்கிழமை மாணவிகளின் வாக்கு மூலத்தை பதிந்து24/05/2018 வியாழக்கிழமை மாணவிகளின் சட்ட வைத்திய அறிக்கைகளை பெற்று குறித்த தினமே சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்தி சிறந்த முறையில் சட்ட நடவடிக்கை எடுத்த தெல்லிப்பளை பொலிஸார் தற்போது வழக்கை திசை திருப்ப முனைவது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

வடமாகாண மூத்த பொலிஸ்மா அதிபர் கணேசநாதன் யூனியன் கல்லூரி பழைய மாணவன் என்பதால் அவரது பக்க சார்பான தலையீடு ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் சந்தேகிக்கின்றனர். காரணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு வருமாறு பாதிக்கப்பட்ட பிள்ளைகள் பெற்றோர்களை மீண்டும் அழைத்த தெல்லிப்பளை பொலிஸார் 3 மணி நேரம் மீண்டும் விசாரணை செய்துள்ளனர்.

விசாரணை மறைமுகமாக அச்சுறுத்தும்பாணியில் இருந்ததாகவும் குறித்த சேருக்கு மனநோய் உள்ளதாகவும் பாடசாலைக்கு அவ பெயரை ஏற்படுத்த சோடிக்கப்பட்ட வழக்கு என அதிபர் தமக்கு முறையிட்டுள்ளதாக கூறி பெற்றோர்கள் பிள்ளைகளை தனி தனியாக கடுமையான விசாரணை செய்துள்ளனர். இதற்கு பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் பொலிஸாருடன் முரண்பட்டுள்ளதுடன் “எமது பெண்பிள்ளைகளின் மானத்தை விற்று பாடசாலை மானத்தை விற்க வேண்டிய அவசியம் இல்லை” என உறுதியாக தெரிவித்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக அதிபர் சார்பாக மாலை நேர வகுப்புக்கு பொறுப்பான பெற்றோர் சங்க தலைவர் பாதிக்கப்பட்ட மாணவிகள் வீடுகளுக்கு சென்று மாணவிகளிடம் பேட்டி எடுத்து தனது கைத்தொலைபேசியில் பதிவு செய்து வருகின்றார்.

சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் பாடசாலை அதிபரின் உறவினர் என்பதால் நீதின்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை எவ்வளவுதூரம் உண்மையாக கனதியாக இருக்கும் என்பதிலும் பலத்த சந்தேகம் உள்ளது.

எனவே தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நேரடியாக குறித்த வழக்கில் ஆஐராக வேண்டும். அல்லது மனித உரிமை ஆணைக்குழு தலையீடு செய்ய வேண்டும். அல்லது இலவச சட்ட நிறுவன சட்டத்தரணிகள் பிள்ளைகள் சார்பாக ஆஐராக வேண்டும்.

இல்லை எனில் பாதிக்கப்பட்ட ஏழை மாணவிகள் 8 பேருக்கும் நீதி கிடைப்பது என்பது எட்டாக்கனியே.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 650

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*