மாவட்ட நீதிபதிகள் நால்வர் பதவியேற்பு

கிளிநொச்சி , ஊர்காவற்துறை நீதிபதி, மல்லாகம் மாவட்ட நீதிபதி, மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி ஆகியோர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் எடுத்த பதவியினை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் ஆண்டின் இடைக்கால இடமாற்ற கொள்கையின் அடிப்படையில் வடக்கு கிழக்கில் மாவட்ட நீதிபதிகள் 9 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும் அதன் அடிப்படையிலேயே இவர்கள் பதவியேற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் ஆண்டின் இடைக்கால இடமாற்ற கொள்கையின் அடிப்படையில் வடக்கு கிழக்கில் மாவட்ட நீதிபதிகள் 9 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியாக பதவி வகித்த மாணிக்கவாசகர் கணேசராஜா, கிளிநொச்சி மாவட்ட நீதிபதியாகவும் நீதிவானாகவும் இன்று பதவியேற்றார்.

மன்னார் மாவட்ட நீதிபதியாக கடமையாற்றிவந்த ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா மல்லாகம் மாவட்ட நீதிபதியாக இன்று பதவியேற்றார்.

மல்லாகம் மாவட்ட நீதிபதியாக இதுவரைக் கடமையாற்றிய அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், ஊர்காவற்றுறை மாவட்ட நீதிபதியாகவும் நீதிவானாகவும்
கிளிநொச்சி மாவட்ட நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா, மல்லாகம் மேலதிக மாவட்ட நீதிபதியாகவும் பதவியேற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று காலை 8 மணிக்கு இந்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 334

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*