காட்டுப்புலம் சிறுமி கொலை 2011ம் 2018ம் ஓரே குழுவால் அரங்கேற்றபட்டது

சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியை சேர்ந்த ஆறு வயது சிறுமி அப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்க்கபட்டுள்ளது. கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டமைக்கான அடையாளம் காணப்படுகின்றது. மாணவியின் தோடும் களவாடப்பட்டுள்ளது. பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த பின்னர் பாடசாலைச் சீருடையுடன் சிறுமி காணாமற்போனார். தாயும் தந்தையும் வேலையின் நிமித்தம் {கூலி வேலை} வெளியே சென்றிருந்தனர். இந்த சம்பவம் 2018ம் ஆண்டு யூன் மாதம் 24ம் திகதி நடைபெற்றது. ஆனே இதே போண்று ஒரு கொலை இதே கிராமத்தில் இதே கிணற்றில் இதே வயதை உடைய சிறுமி கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசபட்டுள்ளது. அண்றும் இண்றும் கொலையை தூண்டியது ஒரு குழுவே.

2011-08-25 சுழிபுரம் மத்தியிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட 8 வயதுச் சிறுமி கொலை செய்யப்பட்ட பின்னரே கிணற்றில் வீசப்பட்டுள்ளதாக கொலை செய்யப்பட்ட சிறுமியின் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுழிபுரம் பாண்டவெட்டை காட்டுப்புலம் மகாவித்தியாலயத்தில் கற்கும் கிருஷ்ண மூர்த்தி சாலினி என்ற எட்டு வயதுச் சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். மண்டையோட்டின் முன் பகுதியில் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டமைக்கான பெரியதொரு துவாரம் காணப்படுகின்றது. எனவே கொலை செய்யப்பட்ட பின்னரே சடலம் கிணற்றில் வீசப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளைஇ சடலம் உருக்குலைந்திருப்பதால் கடத்தப்பட்ட அன்றைய தினமே கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருக்க வேண்டுமென்றும் அத்துடன் இடுப்பு பகுதிக்கு கீழே எதுவித ஆடைகளும் இல்லாதிருப்பதால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டிருக்கலாம் எனவும் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photos – NEWJAFFNA.net Investigation Team

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 1103

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*