கரும்புலி நினைவு தினம் – கடிதத்தைக் கையளித்தார் விஜயகலா!!

கரும்புலி மில்லரின் 30வயது நினைவு தினம் இண்று.

கரும்புலி மில்லரின் கொள்கையில் அரசியல் செய்யும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உன்னதமான 45 ஆயிரம் மாவீரர்களினதும் யுத்தத்தில் கொல்லப்பட்ட 2 இலட்சம் மக்களின் நினைவாக அரச அமைச்சுப் பதவியை மக்களுக்காகத் தூக்கி எறிந்த தினம்.

மில்லர் வடமராட்சியின் துன்னாலைப் பகுதியைப் பிறப்பிடமாக கொண்டவன். அவனுடைய தந்தை இலங்தை வங்கி ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றி வந்தார். தன்னுடைய தாயகத்தை மீட்க அவன் எப்போதும் சித்தமாக இருந்தான்.

06 கோடி தமிழரின் தேசிய உணர்வுக்காக அவர்களின் மானத்தை காக்க சிங்கள அரசின் அற்ப சொற்ப சலுகைகளை தூக்கி எறிந்து பதவி விலகல் கடிதத்தைக் கையளித்தார் விஜயகலா!!

அமைச்சுப் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை அரச தலைவர் மற்றும் தலைமை அமைச்சரிடம் விஜயகலா மகேஸ்வரன் கையளித்துள்ளார் என்று தெரியவருகின்றது.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் புலிகள் மீளுருவாக்கம் தொடர்பில் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

தெற்கு அரசியல்வாதிகள் பலரும் விஜயகலா மகேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.

இந்தநிலையில் தனது பதவி விலகல் கடிதத்தை விஜயகலா மகேஸ்வரன் கையளித்துள்ளார் என்று தெரியவருகின்றது.

விஜயகலா மகேஸ்வரன் தமிழ்த் தேசியத்திற்காக செய்த சேவையை இன்றுவரை எவராலும் செய்ய முடியாது. தமிழ் மக்களுக்காக தன்உயிரை தியாகம் செய்தவர் தியாகராஜா மகேஸ்வரன்.

விடுதலைப் புலிகள் இறுதியில் விட்டுவிட்டுச் சென்றது 04 விடயங்கள் மட்டுமே.

01 – ஒட்டு மொத்த தமிழ் மக்களின் அழிவு – Mullivaikal

02 – ஒட்டு மொத்த அழிவின் ஊடாக உலகில் ஏற்பட்ட அனுதாபம். – UN , UNHRC,

03 – ஐரோப்பாவில் நடைபெற்ற நீதிமண்ற தீர்புகள் , Sweden-EU, Swiss, UK, EU , Ets

04 – ஒஸ்லோ உடன்படிக்கை – ஒஸ்லோ உடன்படிக்கைக்கு சட்டரீதியான அங்கீகாரம் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனால் கொடுக்கப்பட்டது. ஒஸ்லோ உடன்படிக்கை இலங்கை அரசு தரப்பாக ஜ.தே.கட்சியாலும் தமிழ் தரப்பாக புலிகளாலும் கைஎழுத்து இடப்பட்டது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஜ.தே.கட்சி ஊடாக விஜயகலா மகேஸ்வரனும் வடக்கு மக்களிடம் ஒஸ்லோ உடன்படிக்கையைத் தேர்தல் விஞ்ஞாபனமாகப் போட்டு தமிழ் மக்களின் அங்கீகாரம் பெற்றனர்.

அதன் ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஜ.தே.கட்சியும் ஒஸ்லோ உடன்படிக்கைக்குப் தமிழ் மக்களிடம் ஜ.தே.கட்சிக்குள் இருந்து பொதுசன வாக்கெடுப்பு நடாத்தி சட்டரீதியான அங்கிகாரம் பெற்றது.

அந்த உன்னத பணியை செய்த தேசிய தலைவிதான் விஜயகலா மகேஸ்வரன்.

அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது கை வைத்தால் ஒட்டுமொத்த முப்படையினரும் சர்வதேச சட்ட சிக்கலுக்குள் மாட்டுபடுவார்கள் என்பது உரியவர்களுக்கு நன்கு தெரியும்.

மக்களின் துன்பங்களை பொறுத்துக்கொள்ள முடியாமையினாலேயே குரல் கொடுத்தேன் – மக்களுக்காகவே பதவி துறந்தேன் என்கிறார் விஜயகலா மகேஸ்வரன்

வடக்கில் மக்களின் துன்பங்களை துயரங்களை வெளிக்கொணரும் வகையிலேயே நான் கருத்துத் தெரிவித்திருந்தேன். அத்தகைய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமையால் கட்சியின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியும் மக்களுக்காகவும் எனது அமைச்சுப் பதவிலியிருந்து இராஜினாமாச் செய்துள்ளேன் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடக்கில் குறிப்பாக யாழ்.குடாநாட்டில் வன்முறைகளும் குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளன. ஆறு வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 59 வயதான வயோதிபப் பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் வீட்டில் கொள்ளையும் இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. போதைவஸ்து பாவனையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் மக்களின் துன்பங்களைத் தாங்கமுடியாது புலிகளின் காலத்தை நினைவூட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

ஆறு வயதுச் சிறுமியின் படுகொலை உட்பட வன்முறைகள் குடாநாட்டில் அதிகரித்து வருவதனால் மக்கள் அச்சத்தின் மத்தியில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் நிம்மதியின்றி வாழ்கின்றனர். இந்த நிலையில் மக்களின் துன்பங்களை வெளிக்கொணர வேண்டியது அவர்களது பிரதிநிதியான எனது கடமையாகும். இதனால்தான் மக்களின் துன்பங்களை வெளிக்கொண்டு வரும் வகையில் எனது கருத்தினை தெரிவித்திருந்தேன்.
மக்களின் துன்ப துயரங்களை பறைசாற்றாது மக்களின் பிரதிநிதியாக இருக்க முடியாது. இதனால்தான் வடபகுதி மக்களின் துன்பங்களை எடுத்துக்கூறும் வகையில் உரையாற்றியிருந்தேன். இந்தக் கருத்து தென்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமையால் இவ்விடயம் தொடர்பில் கட்சித்தலைமைக்கு விளக்கம் அளித்துள்ளேன்.

கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமரும் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அவர்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தபோது என்னுடன் தொடர்புகொண்டு எனது கருத்துக் குறித்து கலந்துரையாடினார். இதன்போது எனது நிலைப்பாட்டினை அவருக்கு விளக்கிக் கூறினேன். எனது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமையால் வேண்டுமானால் அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்வதற்கு நான் தயாராகவுள்ளதாக பிரதமரிடம் நான் எடுத்துக்கூறினேன். ஆனால் அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதன் பின்னர் கொழும்பு திரும்பிய நான் புதன்கிழமை மாலை பிரதமரைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன் வடக்கில் குறிப்பாக குடாநாட்டில் இடம்பெற்று வரும் போதைப்பொருள் பாவனை, வன்முறைகள், படுகொலைகள் தொடர்பில் எடுத்துக்கூறியதுடன் மக்களின் துன்பங்களைப் பொறுக்க முடியாமையால்தான் நான் உரையாற்றியதாக விளக்கமளித்தேன். தற்போது எனது உரை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமையால் கட்சியின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தற்காலிகமாக அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதற்கு நான் தயார் என்று பிரதமரிடம் எடுத்துக் கூறினேன்.

இதற்கிணங்கவே நான் எனது அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்துள்ளேன். என்னைத் தெரிவுசெய்த மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர வேண்டியது அவசியமானதாகும். மக்கள் துன்பத்திலும் துயரத்திலும் இருக்கின்றபோது நாம் எதனையும் செய்யாது வேடிக்கை பார்க்க முடியாது. இதனால்தான் மக்களின் துன்பங்களில் எடுத்துக்கூற நான் முயன்றேன். இதனால் தென்பகுதியில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளதனால் எனது அமைச்சுப் பதவியினை மக்களுக்காக மகிழ்ச்சியுடன் இராஜினாமாச் செய்துள்ளேன்.

எனது மக்களுக்காக குரல் எழுப்பியமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பிலான எத்தகைய விசாரணைகளையும் எதிர்கொள்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன். வடக்கு மக்கள் எம்மை தமது பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்காகவுமே தெரிவுசெய்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் துன்பப்படுமபோது நாம் பேசாதிருக்க முடியாது.

வடக்கில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை மற்றும் வன்முறைகள் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தி மக்கள் அச்சமின்றி அமைதியாக வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். அவ்வறான சூழல் ஏற்படுவதற்கு அரசாங்கமானது உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆறு வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்டமை போன்ற சம்பவங்கள் இனிமேலும் தொடரக்கூடாது. மக்களுக்காக அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்துள்ளமை தொடர்பில் நான் பெருமை கொள்கின்றேன்.

01 – விஜயகலாவை நினைத்தால் கவலையாக இருக்கின்றது -கோத்தபாய

சர்­வ­தேச ரீதியில் பயங்­க­ர­வாத அமைப்­பாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட விடு­தலைப் புலிகள் தொடர்பில் இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்­தி­ருக்கும் கருத்து அர­சி­ய­ல­மைப்பை மீறும் செயற்பாடாகும். அதையிட்டு கவலையடைய வேண்டியுள்ளது. எனவே அரசியல மைப்பை மீறியவருக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையை அவருக்கு எதிராக மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார்.

02 – அரசாங்கத்தில் இருந்து கொண்டு தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்தவர் விஜயகலா மகேஸ்வரனே….! அமைச்சர் அனந்தி

03 – அரசு மீதான விரக்தியே விஜயகலாவின் கூற்று -கூட்­ட­ர­சுதான் பொறுப்பு என்கிறார் அஸாத்சாலி!!

04 – அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுடன் இணைந்து திடீரென ஒஸ்டின் பெர்னாண்டோ இன்று பதவி விலகியிருப்பது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. னாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெனாண்டோ தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளராக பணியாற்றிய பி.பி. அபேகோன் ராஜிநாமா செய்தமையினை அடுத்து, கிழக்கு மாகாண ஆளுநராகக் கடமையாற்றி வந்த ஒஸ்ரின் பெனாண்டோ 2017ஆம் ஆண்டு ஜுலை மாதம், ஜனாபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

ஒஸ்ரின் பெனாண்டோ- இலங்கை நிருவாக சேவையில் பணியாற்றி ஓய்வு பெற்ற, மிக சிரேஷ்டமானவர்களில் ஒருவராவார்.

எங்களுக்குப் புனர்வாழ்வளிக்க வேண்டுமா என்று முடிவெடுக்க ரஞ்சன் ராமநாயக்கவை வடக்கிற்கு கௌரவத்துடனும் அன்புடனும் அழைப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் இதை குறிப்பிட்டுள்ளார். மேலும் முதலமைச்சரிடம் கேட்கப்பட் கேள்விகளும், அவற்கு முதலமைச்சரின் பதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கேள்வி – விக்கி, விஜயகலா, சிவாஜிலிங்கத்திற்கு விசுவமடு முகாமில் புனர்வாழ்வளியுங்கள் என்று பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ளார். இதைப் பற்றி உங்கள் கருத்தென்ன?

பதில் – நான் சிங்களத் திரைப்படத்துடன் சம்பந்தப்பட்ட பலருடன் எனது இளமைக்காலத்தில் பழகியவன். என் நண்பரும் வாசுவின் சகோதரருமாகிய யசபாளித நாணயக்காரவின் நட்பால் இது ஏற்பட்டது. விஜய்குமாரணதுங்க போன்ற பலரை அறிந்து வைத்திருந்தவன். ரஞ்சனை எனக்கு பழக்கமில்லை. ஆனால் அவர் ஒரு உணர்ச்சி மிகுந்த ஒருவர் என்றுஎனக்குத் தெரியும். நாம் கூறுவனவற்றையும் செய்வதையும் பத்திரிகை வாயிலாக கண்டு உணர்ச்சிவசப்பட்டு விமர்சிக்கின்றார்.

உண்மையை உணர்ந்த பின்னரே அவரின் வார்த்தைகள் வெளிவர வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். எங்களுக்குப் புனர்வாழ்வளிக்க வேண்டுமா என்று முடிவெடுக்க ரஞ்சன் ராமநாயக்கவை வடக்கிற்கு கௌரவத்துடனும் அன்புடனும் அழைக்கின்றேன்.

இரத்தின பிரியபந்து இல்லாதவர்களுக்கு கொடுத்து அவர்களின் அன்பைப் பெற்றுக் கொண்டார். எங்கள் நால்வரிடையில் விஜயகலாவும், சிவாஜிலிங்கமும் நானுமே இல்லாதவர்கள்.

எமது மக்களுக்கு பாதுகாப்பில்லை, எமக்கு அதிகாரங்கள் இல்லை, எமது கருத்துக்களுக்கு தெற்கில் இடமில்லை, எமக்கு மதிப்பில்லை, புறக்கணிக்கப்படுகின்றோம், ஆக்கிரமிக்கப்படுகின்றோம். ஆகவே இரத்தினப்பிரியபந்து போல் எமக்கு வேண்டுவனவற்றை உடனே வழங்க ரஞ்சன் ராமநாயக்க முன்வர வேண்டும்.

எம்மிடம் இல்லாதவற்றை அவரின் அரசாங்கத்தின் ஊடாக எங்களுக்கு வழங்கினால் நாமும் அவர் மேல் அன்பும் மரியாதையும் காட்டுவோம். வடமாகாணம் வந்து நிலைமையைப் பார்த்துச் செல்ல பிரதி அமைச்சரை அன்புடன் அழைக்கின்றேன்.

இங்குவந்து இராணுவத்தினரிடமோ பொலிசாரிடமோ தனது கட்சிக்காரரிடமோ உண்மையைக் கேட்பதில் பயன் இல்லை. பொதுமக்களிடம் கேட்கட்டும். அவர்கள் சொல்வார்கள் யாருக்குப் புனர்வாழ்வு அளிக்க வேண்டும் என்று!

கேள்வி – நீங்கள் சம்மதம் தெரிவித்தே வவுனியா, மன்னார் அரசாங்க அதிபர்கள் நியமிக்கப்படுகின்றார்கள் என்று பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதே. அதுபற்றி?

பதில் – என்னுடன் எவரும் பேசவுமில்லை சம்மதம் எதுவும் கேட்கவுமில்லை. இவ்வாறான பச்சைப் பொய்களை பத்திரிகைகள் புனைந்துரைக்கின்றனவா அல்லது அப்பிரதேச அரசியல்வாதிகள் பத்திரிகைகளுக்கு பொய்யான தகவல்களைக் கூறிவருகின்றார்களா? தயவு செய்து விசாரித்துச் சொல்லுங்கள்.

கேள்வி – விஜயகலா மகேஸ்வரன் கூறியது பற்றி தெற்கில் பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளதே? அது பற்றி உங்கள் கருத்து.

பதில் – வடமாகாணத்தின் தற்கால பாதுகாப்பற்ற நிலையையும் முன்னைய பாதுகாப்பான நிலையையும் பற்றி விமர்சிக்க எவருக்கும் உரித்துண்டு. நான் அண்மைய கூட்டத்தில் இருந்தேன். ஆனால் விஜயகலா கூறியசொற்களைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.

ஒலிவாங்கியில் ஏதோ பிழை இருந்தது. பின்னர் அவரிடமே கேட்டறிந்தேன். இன்றைய பாதுகாப்பற்ற நிலைமாறி பாதுகாப்பான சூழல் ஏற்பட வேண்டும் என்று அவர் கூறியதில் என்ன பிழை என்று எனக்குத் தெரியவில்லை.

முன்பு எமது மக்கள் பாதுகாப்பாக வாழ்ந்து வந்தார்கள் என்பது உண்மை. போர்க்காலத்தில் ஒரு பெண் தனிமையில் நகை நட்டுஅணிந்து கொண்டு சூரிய அஸ்தமனத்தின் பின்னர் வீடு நோக்கி நடந்து சென்றால் அவருக்கு எந்தத் தொந்தரவோ பாதிப்போ ஏற்படாதிருந்தது என்பது உலகறிந்த உண்மை. இன்றுஅப்படியா?

வாள்வெட்டு, வன்புணர்ச்சி, வன்செயல்கள், போதைப்பொருள் பாவனைகள் அதிகரித்து வருகின்றன. இலஞ்ச ஊழல்கள் மலிந்து காணப்படுகின்றன. அதனால் தான் நான் இராணுவத்தை திரும்ப அழையுங்கள், பொலிஸ் அதிகாரங்களை எமக்குத் தாருங்கள். சகலவன்முறைகளையும் நிறுத்திக் காட்டுகின்றோம் என்று கூறியுள்ளேன்.

நிலைமையை புரிந்துகொள்ளாமல் தெற்கில் உள்ளவர்கள் தமது உள்ளார்ந்த வெறுப்புக்களை பிரதிபலிப்பது வருத்தத்திற்கு உரியது. இவ்வாறான தெற்கத்தையவர்களின் நடவடிக்கைகள் விஜயகலாவிற்கு எதிரானது அல்ல. தமிழர் மீதான சந்தேகம், வெறுப்பு, பயம் யாவற்றையும் பிரதிபலிக்கின்றது.

எமது பேச்சுக்களை விமர்சிக்காமல் எங்களுடன் ஒற்றுமையாகப் பேச முன்வாருங்கள். சமஷ்டி அரசியல் அமைப்பொன்றை நிறுவ முன்வாருங்கள் என்று தெற்கத்தைய அரசியல் வாதிகளிடம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

அத்துடன் நாங்கள் எங்கள் உரித்துக்கள் பற்றியோ பாதுகாப்பு பற்றியோ பேசும் போது எம்மைப் பயங்கரவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் அழைப்பதை நிறுத்துமாறு கோருகின்றேன்.

பிரபாகரன் காலத்தில் எம் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்ற உண்மையைக் கூறுவதால் நாங்கள் எவரும் பயங்கரவாதிகள் ஆகிவிடமாட்டோம்.

அந்தநாள் இன்று வந்திடாதோ என்று விஜயகலா கூறுவதால் அவர் தீவிரவாதி ஆகிவிட முடியாது. புலிகள் காலத்தில் எம் மக்கள் (யுத்தத்தில் ஏற்பட்ட பாதிப்புக்களை விட) பொதுவாக பாதுகாப்பாக இருந்தார்கள் என்பது உலகறிந்த உண்மை.

ஆகவே விஜயகலா தனது கடமைகளைத் தொடர்ந்து பணியாற்ற அவரின் கட்சி இடமளிக்க வேண்டும். அவர் தேசியக் கட்சியில் இடம் பெறுவதால் தமிழச்சி என்ற அந்தஸ்தை இழந்தவராகக் கணிக்கக்கூடாது. விஜயகலாவின் சுதந்திரமும் தனித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 346

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*