விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது – சரத் என் சில்வா

தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றியமைக்கு எதிராக அரசியலமைப்பின் படி வழக்கு தொடர முடியாது என்று முன்னாள் தலைமை நீதியரசரான சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற தேசிய ஒன்றுமைக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் படி விஜயகலாவுக்கு எதிராக வழக்கு தொடர முடியாது. விஜயகலா மகேஸ்வரனின் இந்த கருத்துக்கு “பின்னால் தூண்டல் இருக்கலாம்” என்று சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 6ஆவது திருத்தத்திற்கு முரணான கருத்தை வெளியிட்ட போதிலும் இதன்படி விஜயகலா செய்யவில்லை. ஆகவே அவருக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யமுடியாது.

அதற்குப் பதிலாக அவர் விரைந்து அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துவிட்டார். மக்களை திசைதிருப்பும் செயலாகவே இதனை பார்க்கின்றோம். என்றும் முன்னாள் தலைமை நீதியரசரான சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 256

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*