சரனாகதி தமிழ்த் தலைமைகளுக்கு விஜயகலா முன்னுதாரணம்!

கூழைக் கும்புடு போட்டு சரனாகதி அரசியல் நடத்தும் தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகளுக்கு விஜயகலா சிறந்த முன்னுதாரணம் என்பதை நிறுபித்துள்ளார்.

விஜயகலா மகேஸ்வரன் தமது அமைச்சுப்பதவியை இராஜினமா செய்ததன் மூலம் அவர் மேற்கேத்தேய நாடுகளில் நிலவும் ஜனநாயக அரசியல் கலாச்சாரப் பன்பையும் இங்கு வெளிப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம் அவர் தனக்கு கொடுக்கப்பட்ட அமைச்சுப்பதவி மீது தமக்கு மோகம் இல்லை என்பதையும் அவர் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ்த் தேசியத்தின் பேரில் போலி வேடமிடும் அரசியல் வாதிகளை விடவும் இன்று மேல் ஓங்கி நிற்கின்றார் விஜயகலா மகேஸ்வரன்.

கதிரைக்கும் கோடிக்கும் விலை போய்க் கொண்டிருக்கும் தமிழ் தேசிய வாதிகளின் வெற்றுப் பேச்சுக்களுக்கு செருப்படி கொடுத்து அவர்களை ஓரம் கட்டி தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

தனது உரையின் பின்னர் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து அவர் தனது பதவியை இராஜினாமா செய்ய உள்ளதாக நேற்று முன்தினம்(05) காலை அறிவித்திருந்தார்.

குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டு சுமார் 12 மணித்தியாலங்கள் செல்வதற்குள் விஜயகலா மகேஸ்வரன் அதற்கு செயல் வடிவமும் கொடுத்துள்ளார்.

இது இலங்கையில் மட்டுமல்லாது புலம் பெயர் நாடுகளிலும் பெரும் செல்வாக்கை செலுத்தியிருக்கின்றது.

‘தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்காய் அன்று உயிர்துறந்தார் மகேஸ்வரன் இன்று பதவி துறந்தார் ‘தமிழ்த்தலைவி’ விஜயகலா’ என எழுதப்பட்ட வாசகங்களுடனான சுவரொட்டிகள் இதனை மெய்ப்பித்திருக்கின்றன.

தமது இரத்தம் பிரபாகரன்…, புலிகள்…,தமிழ் உணர்வு என்று வீரபிரதாபம் பேசுபவர்கள்…விஜயகலாவின் உரை தொடர்பில் வாய் மூடி மௌனிகளாக இருப்பதே அவர்களின் முள்ளந்தண்டு இல்லாத்தனத்தை வெளிகாட்டி விட்டது.

வடக்கு முதல்வர், அமைச்சர் மனோ கணேசன், அனந்தி சசிதரன் உள்ளிட்ட ஒரு சிலர், அமைச்சர் விஜயகலாவின் உரையில் என்ன தவறு இருக்கிறது என்று தமது பக்க நியாயத்தை, சார்பு நிலை வாதத்தை வெளிப்படையாகவே வெளிப்படுத்தி விஜயகலாவிற்கு ஆறுதல் அளித்திருக்கின்றனர்.

ஆனால், நல்லாட்சி அரசாங்கத்தை தாம்தான் கொண்டு வந்ததாக தம்பட்டம் அடிப்பவர்கள் எதுவுமே தெரியாதது போல் மௌனம் சாதிக்கின்றனர்.

ஒரு வேளை, அப்படி ஒரு சம்பவம் நடந்ததா என்று கேட்கும் நிலைக்கு கூட தமிழ்த் தேசியவாதிகள் முனையலாம்.

கோடிகளை கை நீட்டி வாங்கினால் எப்படி உரிமையுடன் கூடிய ஒருவரின் பேச்சினை ஆதரித்து பேச முடியும்.

மனசாட்சிக்கும், கை நீட்டி வாங்கியதற்கும் துரோகம் செய்ய முடியாது என்பதை போலித் தமிழ்த தேசியம் நிருபித்து விட்டது.

அண்மையில் யாழில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் விஜயகலா..,

வடக்கில் அதிகரித்துள்ள அட்டூழியங்களை கட்டுப்படுத்த மீண்டும் விடுதலைப் புலிகள் உருவாக வேண்டும் போல்.., எனும் தொனிப்பட உரையாற்றியிருந்தார்.

இந்த உரை அமைச்சர் “விஜயகலா” விற்கு எதிராக தெற்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

நாடாளுமன்றில் அமைச்சர் றிஷாட் பதியுதின் முஸ்லிம் இளைஞர்களை ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளாதீர்கள் எனறு உரையாற்றியிருந்தார்.

அதேபோன்று நாடாளுமன்றத்திற்கு குண்டு வைக்கப்படும் என்று விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.

இத்தகைய பேச்சுக்கள் ஏன் தெற்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தவில்லை, திட்டமிடப்பட்ட குற்றச்செயலுக்கான பேச்சு என்று ஏன் விமல் வீரவன்ச மீது விசாரணை முன்னெடுக்கப்படவில்லை.

ஆக விஜயகலா மகேஸ்வரன் பேசியது மட்டும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரனானது எனும் தீர்மானத்திற்கு வரும் நிலை எதற்கு..

புலிகள் தமக்கு ஒரு பொருட்டு அல்ல என்று போரை முடிவிற்கு கொண்டு வந்தாக குரல் எழுப்பிய சிங்கள தேசம் இன்று புலிகள் எனும் உச்சரிப்பை கேட்டு மாரடைப்பு நிலைக்கு சென்றுள்ளது.

விஜயகாலா மகேஸ்வரன் விவகாரத்தில் வலுப்பெறும் எதிர் கருத்துகளுக்கு எதிராகவும் அவரை பலப்படுத்துவதற்கும் தமிழ் அரசியல் தலைமைகள், பொது அமைப்புக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகங்கள் தத்தமது எல்லைகளுக்கு அப்பால் களம் இறங்கி பணியாற்றியிருக்க வேண்டும்.

ஆனால் அது இதுவரையில் இடம்பெற்றதாக இல்லை.. தெற்கில் பிரபாகரனதும், புலிக் கொடியும் எரியூட்டப்பட்டு சிங்கள தேசத்தின் ஆவேசம் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஆயினும் தமிழ் அரசியல் பரப்பில் ஒரு பெண்னாக இருந்து கொண்டு புலி எனும் பெயரை ஓங்கி ஒலித்திருக்கும் விஜயகலாவிற்கு ஆதரவு தெரிவித்து எவரும் வீதிக்கு இறங்கியதாகவோ, அறிக்கை விடுத்ததாகவோ தெரியவில்லை.

தேவையில்லாததுக்கெல்லாம் வீதிக்கு இறங்கி கொடி பிடிக்கும் வெட்டிக் கூட்டங்கள் விஜயகலாவின் விடயத்தில் எங்குபோய் சுருண்டு கிடக்கிறார்களோ தெரியவில்லை.

தேர்தல்கள் ஊடாக தமது அரசியல் கதிரைகளை தக்க வைக்கும் நிலைப்பாட்டிலேயே இன்றைய தமிழ்த் தேசியம் கவனம் செலுத்துகின்றதே தவிர தமிழ் மக்களின் உரித்துக்கள் தொடர்பில் சிந்திப்பதாக இல்லை.

எவற்றை எல்லாம் தாம் முன் வைத்து இந்த நல்லாட்சிக்கு ஆதரவு கொடுத்தார்களோ அவைகள் எவையும் இன்று முழுமையாக நிறைவேறியதாக இல்லை.

கானாமல் போனோரது உறவுகள் வவுனியாவில் முன்னெடுக்கும் போராட்டம் 500வது நாளை தொட்டு நிற்கின்றது.

இத்தகைய போராட்டத்தில் தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் எத்தனை நாட்கள் தம்மை ஈடுபடுத்தினார்கள் அல்லது எத்தகைய நம்பிக்கை தரக்கூடியதான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்கள்.

இது போன்ற விடை காணப்பட வேண்டிய பல கேள்விகளை உள்ளடக்கியதாக விஜயகலாவின் பேச்சு நல்லாட்சிக்கும் அதன் ஸ்தாபகர்களின் கவனத்திற்கும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது என்பதே நிதர்சனமான உண்மை ஆகும்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 105

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*