வன்முறைகளைக் கட்டுப்படுத்த வட்டார LTTE விழிப்புக்குழுக்கள்!!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்றுவரும் சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த மீண்டும் புலிகளின் காலத்தில் புலிகளின் நிர்வாகத்தில் இருந்த  விழிப்புக் குழுக்கள் வட்டார ரீதியில் தெரிவு செய்யப்பட்டுப் பொலிஸாருடன் இணைந்து, பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது என முன்வைக்கப்பட்ட பிரேரணை சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சாவகச்­சேரி, நக­ர­ச­பை­யின் அமர்வு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்­றது.

உப தவி­சா­ளர் அ.பால­ம­யூ­ர­னால் இது தொடர்­பான பிரே­ரணை சபையில் சமர்ப்­பித்து உரை­யாற்­றி­னார்.

அந்த உரை­யில் மேலும் தெரி­வித்ததா­வது:

அண்­மைக்­கா­ல­மாகச் சாவ­கச்­சேரி நக­ர­சபை எல்­லைக்­குட்­ட­பட்ட பகு­தி­க­ளில் சட்­ட­வி­ரோதப் போதைப் பொருள்­ கடத்­தல், மணல் மற்­றும் மரங்­கள் கடத்­தல் போன்­ற­வை­யு­டன் திருட்­டுக்­களும் இடம்­பெற்று வரு­கின்­றன. இந்த நி­லை­யில் இவற்­ றைத் தடுக்கப் பொலி­ஸா­ரு­டன் இணைந்து செயற்­பட புலிகளின் காலத்தில் புலிகளின் நிர்வாகத்தில் இருந்த விழிப்­புக் குழுக்­களை வட்­டார ரீதி­யில் ஆரம்­பிக்க வேண்­டும் – என்­றார்.

இந்­தப் பிரே­ர­ணைக்கு ஆத­ரவு தெரி­வித்து உரை­யாற்­றிய ஏனைய உறுப்­பி­னர்­கள் விழிப்­புக் குழுக்­கள் அந்­தந்த வட்­டார உறுப்­பி­னர்­க­ளால் தெரிவு செய்­யப்­ப­டல் வேண்­டு­மெ­ன­வும், இவர்­க­ளுக்கு நக­ர­ச­பை­யும் சாவ­கச்­சேரிப் பொலி­ஸா­ரும் இணைந்து அடை­யாள அட்­டை­கள் வழங்க வேண்­டு­மெ­ன­வும் தெரி­வித்துப் பிரே­ ர­ணைக்கு ஆத­ரவு வழங்­கி­னர்.

இதே­வேளை, கோரிக்­கை­கள் வழங்­க­வும் முறைப்­பா­டு­கள் வழங்­க­வும் வரி­யி­றுப்­பா­ளர்­கள் நக­ர­சபை அலு­வ­ல­கத்துக்கு வர­வேண்­டி­யுள்­ளது. இத­னால் வரி­யி­றுப்­பா­ளர்­க­ளின் கோரிக்­கை­க­ளுக்கு உட­னுக்­கு­டன் பதில் அளிக்­கும் வகை­யில் வட்­டா­ரங்­க­ளில் முறைப்­பாட்­டுப் பெட்­டி­கள் வைக்க வேண்­டு­மெ­ன­வும் உறுப்­பி­னர்­கள் கோரிக்கை விடுத்­த­னர்.

இதற்­குப் பதி­ல­ளித்த தவி­சா­ளர் வட்­டா­ரங்­க­ளில் அபிப்­பி­ரா­யப் பெட்­டி­கள் வைப்­பது தொடர்­பாகச் சபை­யால் ஏற்­க­னவே தீர்­மா­னிக்­கப்­பட் டுள்­ள­தால் இடத்­தேர்வு இடம்­பெற்று வரு­கி­ன்றது. அபிப்­பி­ரா­யப் பெட்­டி­கள் தயா­ரா­ன­தும் உரிய இடங்­க­ளில் வைக்­கப்­பட்டு, அந்­தந்த வட்­டார உறுப்­பி­னர்­க­ளால் தின­மும் சேக­ரிக்­கப்­படும். அவை அன்­றைய தினமே அலு­வ­ல­கத்­துக்குக் கொண்டு வந்து தவி­சா­ளர், உப தவி­சா­ளர், செய­லர் முன்­னிலை யில் பார்­வை­யிட்டு வரி யி­றுப்­பா­ளர்­க­ளின் கோரிக் கை­க­ளுக்கு உட­ன­டி­யா­கப் பதில் வழங்­கப்­ப­டும் – என்­றார்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 295

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*