விஜயகலா விவகாரம் – வாக்குமூலம் கொடுத்தவர்களும் வாக்குமூலம் எடுத்த போலிசாரும் கைதாகலாம்

போலிசுக்கு 50பேர் வாக்குமூலம் கொடுத்ததும் போலிஸ் 50பேரிடம் வாக்குமூலம் எடுத்ததும் பாரிய சட் ட மீறல்.

ஒரு மேடைப் பேச்சு தொடர்பாக துடுப்பாட்ட நேரடி வர்ணனை போன்று வாக்குமூலம் கொடுக்கவும் அதை வாக்குமூலமாக எடுக்கவும் இலங்கையின் சட்டத்தில் அனுமதி இல்லை.

தனிமனித உணர்வுகளை கட்டாயத்தின்பேரில் வாக்குமூலமாக எடுக்கமுடியாது.

இலங்கையின் சட்டப்படி ஒருவரைத் துன்புறுத்தி வாக்குமூலம் எடுக்க முடியாது.

போலிசார் 50 பேரிடம் துன்புறுத்தி வாக்குமூலம் எடுத்துள்ளார்கள்.

ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்  விவகாரம் தொடர்பாக 50 பேர் வாக்குமூலம் கொடுத்ததும் குற்றம் 50 பேரிடம் போலிசார் வாக்குமூலம் எடுத்ததும் பாரிய தண்டனைக்குரிய குற்றமாகும்.

முன்னால் அமைச்சர் பகிரங்கமாக ஊடகங்கள் முன்னிலையில் மேடையில் பேசி இருந்தார்.

குறித்த பேச்சில் உள்ள சரி அல்லது தவறை குறித்த உரையின் மூலப்பிரதியை வைத்தே போலிசாருக்கு விசாரிக்கும் உரிமை உண்டு.

குறித்த உரை தொடர்பாக போலிசார் ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் மட்டும் வாக்குமூலம் எடுத்து விசாரனைகளை மேற்கொண்டிருக்கவேண்டும்.

அதை விடுத்து போலிசார் ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பேசிய உரையை ஊடகங்களிடம் இருந்து பெற்று அதை வாகனத்தில் காவிதிரிந்து பகிரங்க பேச்சு நடைபெற்ற மண்டபத்தில் இருந்தவர்கள் எல்லோரையும் தேடி சென்று அமைச்சரின் உரையை போட்டுக்காட்டி இந்த உரை சரியோ ? அல்லது இந்த உரை தவறோ ? அல்லது இந்த உரை தொடர்பாக நீங்கள் என்ன எனன கருதுகிறியள் ? என்று கேட்பது பாரிய தண்டனைக்குரிய குற்றமாகும்.

இது ஒருவகையில் குறித்த கூட்டத்தில் பிரசன்னமான அரச அதிகாரிகளை மனோவியல்ரீதியாக ஆழும் அரசுக்கு எதிராக அச்சுறுத்தும் ( conspiracy against to government by OCPD under DIG ) செயலாகும்.

அதற்கும் அப்பால் ஒருவர் தனது மனதில் கூட்டம் நடந்து பல நாட்களின் பின்னர் கருதுவதை வாக்குமூலமாக எழுதி அதை நீதிமண்றில் சாட்சிகளாக போலிசார் சரம்பிப்பது பாரிய குற்றமாகும்.

இந்தச் செயல் குறித்த போலிசார் அரசுக்கு எதிராகச் செய்யும் சதியாகவே சட்டம் சொல்கிறது.

கூட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றும்போது கொறட்டைவிட்டு நித்திரை அடித்த தமிழ் பாராளுமண்ற உறுப்பினர்களிடமும் வாக்குமூலம் எடுத்து நீதிமண்றில் கொடுப்பது நீதிமண்றத்தை அவமதிக்கும் செயலாகும்.

போலிசார் வாக்குமூலம் எடுக்கவேண்டுமாக இருந்தால் ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் உரையைப் பத்திரிகைகள் ஊடாக வாசித்த இணையங்கள் ஊடாக வாசித்த பலகோடி தமிழர்கள் , தொலைக்காட்சி ஊடாக செவிமடுத்த பலகோடி தமிழர்கள் , வானொலி ஊடாக கேட்டறிந்த பலகோடி தமிழர்கள் , 6 கோடி தமிழரிடமும் வாக்குமூலம் பெறவேண்டும்.

ஆகவே குறித்த விடயம் தொடர்பாக போலிசார் பலரை துன்புறுத்திவருகின்றனர்.

ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா   மகேஸ்வரனின் உரையை போட்டுக்காட்டி அதற்கு எதிராகக் கருத்து சொல்லுமாறு வற்புறுத்திவருகின்றனர். இது பாரிய குற்றமாகும்.

ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா  மகேஸ்வரனின் உரை தவறு என்றோ அல்லது அது சரி என்றோ எவரும் போலிசுக்கு வாக்குமூலத்தில் சொல்லமுடியாது.

புலிகளை ஆதரித்துப் பேசியமை தவறு என்று ஒருவர் வாக்குமூலம் போலிசுக்கு கொடுத்தால் அவரை விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக நீதிமண்றில் சாட்சியாக போலிசார் நிறுத்க்கூடும் அதேநேரம் விஜயகலா மகேஸ்வரன் கூறிய கூற்றுகள் சரி என்று ஒருவர் போலிசுக்கு வாக்குமூலம் கொடுத்தால் போலிசார் வாக்குமூலம் கொடுத்த அரச அதிகாரியைப் பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கமுடியும் ஆகவே போலிசார் வாக்குமூலம் கேட்டுவந்தால் வாக்குமூலம் கொடுப்பது குற்றமாகும்.

போலிசார் அரச அதிபரின் முன்னனுமதி இல்லாமல் கூட்டத்தில் கலந்துகொண்ட அரச அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெற்றது குற்றமாகும்.

அரச அதிபர் அரச ஊழியரிடம் போலிசார் வாக்குமூலம் பெறுவதற்குரிய அனுமதியை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரிடம் இருந்து எழுத்துமூலமாக பெற்றிருக்கவேண்டும்.

போலிசார் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமண்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இது பாரிய குற்றமாகும். பாராளுமண்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பெறமுதல் பாராளுமண்ற சபாநாயகரிடம் எழுத்துமூலம் முன்னனுமதி பெற்றிருக்கவேண்டும்.

ஆகவே வாக்குமூலம் எடுத்த போலிசார் விஜயகலா விவகாரத்தில் நீதிமண்றில் கைதாகலாம் என்று அறிய முடிகிறது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் வாக்குமூலம் எடுக்கச் சென்ற போலிசார் மூத்திரம்போக மன்னிப்புக் கேட்டு வெளியேறி உள்ளனர்.

விஜயகலா மகேஸ்வரனின் உரையில் தவறு என்றால் மூலப்பிரதியை வைத்துத்தான் விசாரிக்கவேண்டும் அதைவிடுத்துக் கலந்துகொண்டவர்களிடம் வாக்குமூலம் எடுக்கவேண்டும் என்று தன்னிடம் வாக்குமூலம் கேட்டால் வந்த போலிஸ்காறரை கைது செய்ய உத்தரவு கோருவேன் என்று சுமந்திரம் வாக்குமூலம் எடுக்க வந்த போலிசாருக்கு தெரிவித்திருந்தார்.

வாக்குமூலம் எடுக்க வந்த போலிசார் சுமந்திரனிடம் மன்னிப்பு கேட்டு வெளியேறியதாக அறிய முடிகிறது.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 216

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*